ETV Bharat / state

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை தோற்கடித்து புரட்சி படைப்போம் - தமிழ் மாநில காங்கிரஸ்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் விடியல் சேகர், இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியை தோற்கடித்து தமிழ் மாநில காங்கிரஸ் புரட்சி படைக்கும் எனத் தெரிவித்தார்.

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை தோற்கடித்து புரட்சி படைப்போம் - தமிழ் மாநில காங்கிரஸ்
இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை தோற்கடித்து புரட்சி படைப்போம் - தமிழ் மாநில காங்கிரஸ்
author img

By

Published : Jan 19, 2023, 6:30 PM IST

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை தோற்கடித்து புரட்சி படைப்போம் - தமிழ் மாநில காங்கிரஸ்

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வல்லரசம்பட்டியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் விஜயகுமார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விடியல் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் விடியல் சேகர், 'சட்டமன்ற இடைத்தேர்தலில் தமாகா போட்டியிட்ட தொகுதி என்பதால் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதியை ஒதுக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜி.கே. வாசன் கூட்டணித் தலைவர்களுடன் பேசி, ஈரோடு கிழக்கு தொகுதியை தமாகா-ற்கு ஒதுக்க வேண்டும். அப்படி அறிவிக்கிற வேட்பாளரின் வெற்றிக்குப் பணியாற்றுவோம். தமாகா கூட்டணி கட்சியின் வெற்றி பிரகாசமாக உள்ளது. நடைபெற்று முடிந்த சட்டமன்றத்தேர்தலில் திமுக, பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, நீட் தேர்வு ரத்து உள்ளிட்டப் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

இதற்கு மாறாக வீட்டு வரி, சொத்து வரி, பால் விலையை உயர்த்தியுள்ளது. இவற்றை மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து இடைத்தேர்தலில் புரட்சியை ஏற்படுத்தப்போகிறோம். திராவிட மாடல் எனக்கூறி தனது மகனுக்கு அமைச்சர் பதவியை கொடுப்பதில் திமுக குறியாக இருந்துள்ளது. இதுதான் திராவிட மாடலா..? தமிழ்நாடா தமிழகமா என்பது பெரிதல்ல.. மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறுகின்றனர். உங்களுக்கு ஒன்றிய அரசு என்று சொன்னால் இனிக்கிறது. நாங்கள் தமிழகம் என்று சொன்னால் கசக்கிறதா.

மக்களுக்குத் தேவையான திட்டங்களை தீட்டாமல் ஆட்சி பொறுப்பேற்று 18 மாத காலங்களில் மக்களை ஏமாற்றி, வஞ்சித்திருக்கின்ற திமுக அரசின் மக்கள் விரோதச் செயல்களை முன்னிறுத்தி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றிபெறும் என்ற சரித்திரத்தை தமாகா மாற்றி எழுத இருக்கிறது. சின்னத்தைப் பொறுத்தவரையில் ஜி.கே.வாசன் கூட்டணித் தலைவர்களுடன் பேசி சுமூகமாக முடிவு எடுப்பார். ஆட்டோ சின்னம் கைவசம் உள்ளது” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஏற்கனவே ஈரோடு, கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட யுவராஜ் செய்தியாளர்களிடம், “ அதிமுக - தமாகா கூட்டணியானது வலுவானதும் மக்களுக்கானதுமான கூட்டணி. ஓரிரு நாட்களில் தலைவர் ஜி.கே. வாசன் கூட்டணித் தலைவர்களுடன் மீண்டும் பேசி நாளை அல்லது நாளை மறுநாள் முடிவை அறிவிப்போம். ஈரோடு கிழக்குத் தொகுதி தமாகா-விற்கு ஒதுக்குவார்கள் என நம்பிக்கை உள்ளது. வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவோம்.

அதிமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. திமுக வீழ்த்தப்பட வேண்டியது என்பது எங்களின் ஒருமித்த கருத்து. மக்களை நம்பி இருக்கிறோம். சின்னம் இரண்டாவதுதான். மீண்டும் ஈரோடு மக்கள் ஏமாறமாட்டார்கள். எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை வழங்குவார்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் யார்.? - ஜி.கே.வாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.