ETV Bharat / state

தனியார் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - erode district news

ஈரோடு : நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி, கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Oct 7, 2020, 4:05 PM IST

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள ஆப்பக்கூடல் பகுதியில் தனியார் (சக்தி) சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை நிர்வாகம், சென்ற ஏழு மாதங்களுக்கு முன்பு கரும்பு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த கரும்பிற்கான பணத்தை கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக விவசாயிகள் ஆலை நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தனியார் சர்க்கரை ஆலை அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 72 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும் நிலுவைத் தொகையை வழங்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் கரும்பு விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.