ETV Bharat / state

மருத்துவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து கறுப்புப் பேட்ஜ் அணிந்து போராட்டம்!

ஈரோடு: கரோனா நோயாளிகள் உயிரிழப்பின்போது மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து வரும் ஜுன் 18ஆம் தேதி கறுப்புப் பட்டை அணிந்து போராட்டம் நடத்தப்படும் என மருத்துவர் சி.என்.ராஜா பேட்டியளித்துள்ளார்.

author img

By

Published : Jun 16, 2021, 10:41 AM IST

மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்!

இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் ஈரோட்டில், அதன் தேசியத் துணைத் தலைவர் மருத்துவர் சி.என்.ராஜா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், 'தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை அதிக அளவில் பரவி வருகிறது. இதைத் தடுக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்திய மருத்துவ சங்க தேசியத் துணைத் தலைவர் மருத்துவர் சி.என்.ராஜா
மருத்துவத் துறை பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் பிற முன் களப்பணியாளர்கள் கரோனா தொற்றிற்கு எதிராகப் பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார்கள்.
அவர்களின் தியாகம் தெரியாமல் அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மருத்துவர்களும், செவிலியரும் தாக்கப்படுகிறார்கள்.
சுகாதாரத்துறையின் அறிவிப்பிற்கு வரவேற்பு
சமீபத்தில்கூட நமது சுகாதாரத்துறை அமைச்சர் கரோனாவிற்கு எதிராக பணியாற்றும் துறை அலுவலர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார், அதை நாங்கள் வரவேற்கிறோம்.
மத்திய அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவத்துறைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனைக்கும் உறுதியான பாதுகாப்பு வேண்டும்.
மருத்துவமனையைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் விரைவாகவும், கடுமையாகவும் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 18ஆம் தேதி தேதி கறுப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இந்தப் போராட்டத்தில் இந்தியா முழுவதும் 8 லட்சம் மருத்துவர்களும், தமிழ்நாட்டில் 1 லட்சத்து 60 ஆயிரம் மருத்துவர்களும் போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் மருத்துவமனை மற்றும் மருத்துவத்துறை பணியாளர் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற பரிந்துரை செய்ய வேண்டும் எனவும், இரண்டாம் அலையில் தமிழ்நாட்டில் 37 மருத்துவர்கள், இந்தியா முழுவதும் இதுவரை 1,447 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்' என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, ஈரோடு கிளை தலைவர் மருத்துவர் பிரசாத், செயலாளர் மருத்துவர் செந்தில்வேலு, பொருளாளர் மருத்துவர் சுதாகர், மற்றும் மருத்துவர்கள் சுகுமார் மாதவன், அபுல்ஹாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இதையும் படிங்க: சிவசங்கர் பாபா தப்பியோட்டம்? தேடும் பணியை முடுக்கிவிட்ட சிபிசிஐடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.