ஈரோடு: தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலான சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் இன்று (ஜனவரி 21) தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டது. தை அமாவாசாயை காரணமாக பண்ணாரி அம்மன் சிறப்பு அலங்கராத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கோயில் முன் உள்ள குண்டத்தில் உப்பு காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகத்தில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் கோயிலுக்கு வந்ததால் நீண்ட வரிசை படுத்தி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து அம்மன் தரிசனத்திற்கு பிறகு கோயில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் தை அமாவாசையை முன்னிட்டு மக்களுக்கு வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி அம்மன் கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பண்ணாரி அம்மன் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதையும் படிங்க: தை அமாவாசை: பூம்புகார் காவிரி சங்கமத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!