கரோனா ஊரடங்கின்போது கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் பொதுமக்கள் தங்கள் பிரச்னைகள் குறித்த மனுக்களை போட்டுச் சென்றனர். காவல் துறையினரும் மனுதாரரின் வீட்டிற்கே சென்று விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் மனுக்கள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க காவல் துறையினர் முகாம் நடத்திவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஈரோடு, சூரம்பட்டி, வீரப்பன் சத்திரம், கருங்கல்பாளையம், தாலுகா, மொடக்குறிச்சி ஆகிய காவல் நிலையத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை காவல் துறையினர் இன்று (நவ. 18) முகாம் வைத்து நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்ட மனுதாரர்கள் கலந்துகொண்டனர்.
குறிப்பாக முதியோர்கள், பெண் குழந்தைகள், பெண்கள் பிரச்னை, சீட்டு மோசடி உள்ளிட்ட மனுக்கள் மீதான விசாரணையை காவல் துறையினர் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர்.
மாநகர துணைக் கண்காணிப்பாளர் ராஜு தலைமையில் நடைபெற்ற, இந்த முகாமில் ஏராளமான காவல் துறையினர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் ஒரே நாளில் 409 மருத்துவ முகாம்கள்!