ETV Bharat / state

சாலையில் கிடந்த 40 ஆயிரம் ரூபாய் பணத்தை ஒப்படைத்தவர்களுக்கு பாரட்டு..! - ரூபாயை ஒப்படைத்தவர்களை பாரட்டிய எஸ்பி

சாலையில் கிடந்த 40 ஆயிரம் ரூபாயை சத்தியமங்கலம் காவல் துறையிடம் ஒப்படைத்த பெண் மற்றும் வாலிபரை உதவி காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

பாரட்டிய எஸ்பி
பாரட்டிய எஸ்பி
author img

By

Published : Oct 28, 2022, 10:47 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த பவானி சாகர் இலங்கைத் தமிழர் முகாமை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (55). இவர் நேற்று சித்தோடு செல்வதற்காக சத்தியமங்கலம் பேருந்து நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த போது பேருந்து நிலையம் அருகே சாலையில் 500 ரூபாய் நோட்டுகள் கொண்ட 40 ஆயிரம் ரூபாய் கட்டு கிடந்ததை அவர் கண்டார்.

அப்போது அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த பவானி சாகர் தொட்டம் பாளையத்தைச் சேர்ந்த ஷோரூம் ஊழியர் கோகுல் (21), என்பவருடன் சேர்ந்து ராஜேஸ்வரி சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் பணத்தை ஒப்படைத்தார். இதையடுத்து பணத்தைத் தவற விட்டவர்கள் உரிய ஆவணங்களைக் காட்டி பெற்றுச் செல்லலாம் என காவல்துறையினர் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இந்நிலையில் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த குணசிங்கம் என்பவர் காவல்துறையினரைத் தொடர்பு கொண்டு கண்டெடுக்கப்பட்ட பணம் தனது நண்பருடையது எனத் தெரிவித்துள்ளார்.

காவல்துறை விசாரணையில் அதே பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வரும் ஜோஸ்வா (61) என்பவர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மகளின் பிரசவ செலவுக்காக நண்பர் குணசிங்கத்திடம் கடனாக 40 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு கோவை மருத்துவமனைக்குச் செல்வதற்காக சத்தியமங்கலம் பேருந்து நிலையம் செல்லும் வழியில் பணத்தைத் தவற விட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து பணத்தைத் தவற விட்ட ஜோஸ்வாவிடம் பணத்தை ஒப்படைத்த சத்தியமங்கலம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஐமன் ஜமால் சாலையில் கிடந்த பணத்தை நேர்மையான முறையில் காவல்துறையிடம் ஒப்படைத்த ராஜேஸ்வரி மற்றும் வாலிபர் கோகுல் ஆகிய இருவரையும் பாராட்டி சால்வை அணிவித்தார்.

சாலையில் கிடந்த பணத்தை மீட்டு ஒப்படைத்தவர்களை ஏஎஸ்பி பாரட்டினார்

இதையும் படிங்க: நமக்கு நாமே திட்டம் - ரூ.60.20 லட்சம் வழங்கிய தொழிலதிபர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.