ETV Bharat / state

அனுமதியில்லாமல் காப்பகம்; 10 முதியோர்கள் மீட்பு! - erode

ஈரோடு: அனுமதியின்றி வீட்டில் செயல்பட்டு வந்த முதியார் காப்பகத்திலிருந்து 10 முதியோர்களை சமூக நலத்துறை அலுவலர்கள் மீட்டு, அதன் உரிமையாளரை எச்சரித்துள்ளனர்.

erode
author img

By

Published : May 17, 2019, 10:43 PM IST

ஈரோடு மாவட்டம், சின்னியம்பாளையம் அடுத்த பாரதி நகரில் வசித்து வருபவர் ஷேக் அமானுல்லா. இவரது மகள் ஆயிஷா. இவர்கள் இருவரும் சின்னியம்பாளையம் அடுத்த கரூர் சாலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 'அன்பு இல்லம்' என்ற பெயரில் முதியோர் இல்லம் நடத்தி வந்தனர். இதில், ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், கரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து சுமார் 100க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர்.

இந்நிலையில், இந்த முதியோர் இல்லமானது நெடுஞ்சாலைத் துறை மற்றும் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாகவும், இங்கு வசிக்கும் முதியோர்களை துன்புறுத்துவதாகவும் சமூக நலத்துறை மற்றும் மொடக்குறிச்சி காவல் துறைக்கு வந்த புகார் அளிக்கப்பட்டது.

அனுமதியற்ற காப்பகத்திலிருந்து 10 முதியோர்கள் மீட்பு

அந்தப் புகாரின் அடிப்படையில், கடந்த ஆண்டு சமூக நலத்துறை அலுவலர்கள் முதியோர்களை வேறு இடத்துக்கு அனுப்பி வைத்து காப்பகத்தை இடித்து அகற்றினர். இதனைத் தொடர்ந்து, பாரதி நகரில் தற்போது வசித்து வரும் ஷேக் அமானுல்லா, அரசு அனுமதியின்றி தனது வீட்டை முதியோர் இல்லமாக மாற்றி, அதற்கு தன் மகள் ஆயிஷா பெயரைச் சூட்ட முயன்றுள்ளார். இதுகுறித்து, சமூக நலத் துறையினருக்கு வந்த தகவலையடுத்து கடந்த மார்ச் மாதம், ஷேக் அமானுல்லாவின் வீட்டை ஆய்வு செய்த அரசு அலுவலர்கள் அங்கிருந்து 15க்கும் மேற்பட்ட முதியோர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், மீண்டும் முதியோர்களை அமானுல்லா தனது இல்லத்தில் தங்கத் தங்க வைத்துள்ளதாக சமூக நலத்துறைக்கு தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில், சென்னை சமூக நலத்துறை இணை இயக்குநர் ரேவதி, ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பூங்கோதை, மொடக்குறிச்சி வட்டாட்சியர் அசரப்புனிஷா மற்றும் மொடக்குறிச்சி காவல்துறையினர் ஷேக் அமானுல்லாவின் வீட்டிற்குச் சென்று ஆய்வு செய்தனர்.

இதில், அனுமதி பெறாமல் காப்பகம் நடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர், அங்கு தங்கியிருந்த 3 ஆண்கள், 7 பெண்கள் என 10 முதியோர்களை மீட்டு ஈரோட்டில் உள்ள முதியோர் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்று சட்டவிரோதமாக முதியோர்களை வீட்டில் தங்க வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஷோக் அமானுல்லாவை சமூக நலம் மற்றும் காவல் துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு           17-05-19                                        சதாசிவம்
                                                  
 மொடக்குறிச்சி அருகே அரசு அனுமதி இன்றி செயல்பட்டு வந்த முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 10 க்கும் மேற்பட்டோரை சமூகநலத்துறை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்..                                                                
ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் அடுத்த பாரதிநகரில் வசித்து வருபவர் ஷேக் அமானுல்லா, இவரது மகள் ஆயிஷா இவர்கள் இருவரும் சின்னியம்பாளையம் அடுத்த கரூர் சாலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அன்பு இல்லம் என்ற பெயரில் முதியோர் இல்லம் நடத்தி வந்தனர். இதில் ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், கரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர். இங்கு செயல்பட்டுவந்த முதியோர் இல்லம் நெடுஞ்சாலை துறை மற்றும் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்ததாலும் மேலும் முதியோர்களை துன்புருத்துவதாக சமூக நலத்துறை மற்றும் மொடக்குறிச்சி போலீசாருக்கு வந்த புகாரையடுத்து கடந்த ஆண்டு சமூகநலத்துறை அதிகாரிகள் முதியோர்களை வேறு இடத்துக்கு அனுப்பி வைத்து காப்பகத்தை இடித்து அகற்றினர். இதனை தொடர்ந்து பாரதிநகரில் தற்போது வசித்து வரும் ஷேக் அமானுல்லா அரசு அனுமதி இன்றி தனது வீட்டை முதியோர் இல்லமாக மாற்றியுள்ளார். முதியோர் இல்லத்துக்கு பெயர் மாற்றம் செய்து தனது மகள் ஆயிஷா பெயரில் முதியோர் இல்லத்திற்கான அனுமதி பெறுவதற்கு முயற்சித்துள்ளார்.இதுகுறித்து சமூக நலத் துறையினருக்கு வந்த தகவலையடுத்து கடந்த மார்ச் மாதம் ஆய்வு செய்த அதிகாரிகள் அங்கிருந்த 15க்கும் மேற்பட்ட முதியோர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் மீண்டும் முதியோர்களை அமானுல்லா தனது இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறைக்கு வந்த தகவலை அடுத்து சென்னை சமூக நலத்துறை இணை இயக்குனர் ரேவதி, ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பூங்கோதை, மொடக்குறிச்சி தாசில்தார் அசரப்புனிஷா மற்றும் மொடக்குறிச்சி போலீசார் முதியோர் இல்லத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அனுமதி பெறாமல் காப்பகம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து முதியோர்களான 3 ஆண்கள் 7 பெண்கள் உட்பட 10 பேரை சமூகநல துறையினர் மீட்டு ஈரோட்டில் உள்ள முதியோர் காப்பகத்தில் தங்க வைத்தனர்..

 Visual send ftp...
File name:TN_ERD_03_17_RAID_VISUAL_7204339
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.