ETV Bharat / state

பள்ளிக்கு 6 கி.மீ நடந்து செல்லும் அவலம்.. பேருந்துகளை முறையாக இயக்க கோரிக்கை.. மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் மனு! - School students petition for bus

School Students Petition: ஈரோட்டில் அரசு பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால், 6 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து பள்ளிக்கு செல்ல வேண்டி இருப்பதாகவும், பேருந்துகளை சரியான நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மாணவர்கள் மனு அளித்தனர்.

மனு அளிக்க வந்த மாணவர்கள்
மனு அளிக்க வந்த மாணவர்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 9:37 AM IST

மனு அளிக்க வந்த மாணவர்கள்

ஈரோடு: அரசு பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால், நாள்தோறும் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு செல்ல வேண்டி இருப்பதாகவும், பேருந்துகளை சரியான நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மாணவர்கள் மனு அளித்து உள்ளனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்து உள்ள அனுமன்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள் அண்ணாநகர், வேமாண்டம்பாளையம், வெள்ளிவலசு, காமராஜபுரம், ஊஞ்சப்பாளையம், பழையபாளையம், முருங்கத்தொழுவு. இந்த கிராமங்களில் இருந்து 100க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் முகாசி அனுமன் பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று வருவதற்கு ஏதுவாக, சென்னி மலையில் இருந்து எழுமாத்தூர் வரை செல்லும் அரசு பேருந்து, சம்பந்தபட்ட கிராமங்கள் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. தற்போது 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை 7 மணி முதல் 5 மணி வரை பள்ளி நேரத்துடன் சிறப்பு வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: "கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கேட்தற்கு 10 மணல் குவாரி பரிசு" - தமிழக அரசு மீது பாய்ந்த அன்புமணி ராமதாஸ்!

ஆனால் இந்த நேரங்களில் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வர போதுமான பேருந்து வசதி இல்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரை பள்ளிக்கு நடந்து சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பள்ளி மாணவ மாணவியர் கூறுகின்றனர். இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகள் அப்பகுதி மக்களின் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், பள்ளி மாணவ, மாணவிகளின் வசதிக்காக இயக்கப்படும் அரசு பேருந்தை, பள்ளி இயங்கும் நேரத்திற்கு ஏற்ப முறையாக இயக்க நடவடிக்கை எடுக்கக் கோரி குறிப்பிட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: பணி நிரந்தரம் செய்யக்கோரி ஈரோட்டில் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.