ETV Bharat / state

திம்பம் மலைப் பாதை விவகாரம்: மலைவாழ் மக்கள் போராட்டம் அறிவிப்பு - Sathyamanglam thimbam highway blocked people protest

திம்பம் மலை சாலைப் பகுதியில் இரவு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து மலைவாழ் மக்கள் வருகிற 10ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

திம்பம் மலைசாலை போக்குவரத்து தடை : மலைவாழ் மக்கள் போராட்டம் அறிவிப்பு

author img

By

Published : Feb 3, 2022, 2:40 PM IST

ஈரோடு: தமிழ்நாடு- கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமான திம்பம் மலைப்பாதையைத் தடை செய்யும் முயற்சியில் அரசு ஈடுபடக்கூடாது, அரசின் கவனத்தை ஈர்க்க திம்பம் மலைப்பாதையில் பிப். 10ஆம் தேதி பொதுமக்கள் மற்றும் அரசியல்கட்சிகள் பங்கேற்கும் போராட்டம் நடத்தப்படும் என மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தமிழ்நாடு- கர்நாடகத்தை இணைக்கும் திம்பம் மலைச்சாலையில் இரவுப் போக்குவரத்தைத் தடை செய்யும் வகையில், சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு நடை பெற்று வருகிறது.

இது தொடர்பாக மக்கள் கருத்துகளைக் கேட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரவு நேரப் போக்குவரத்து தடைக்குத் தாளவாடி, ஆசனூர் பகுதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து புதன்கிழமை (பிப்.2) தாளவாடியில் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டத்திற்கு முன்னாள் பவானிசாகர் சட்டப்பேரவை உறுப்பினர் பி.எல்.சுந்தரம் தலைமை தாங்கினார்.

வன விலங்கு பாதுகாப்பை மட்டும் பார்க்கக் கூடாது!

திம்பம் மலைசாலை போக்குவரத்து தடை : மலைவாழ் மக்கள் போராட்டம் அறிவிப்பு

இந்தக் கூட்டத்தில், “வன விலங்கு பாதுகாப்பு என்ற ஒரு அம்சத்தை மட்டும் வைத்து இதைப் பார்க்கக் கூடாது. இரு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இதைப் பார்க்க வேண்டும்.

இரவுப் போக்குவரத்தைத் தடுத்தால், பகல் போக்குவரத்தும் தானாகவே முடங்கும். இதுதான் கடந்த காலத்திலும் நடந்தது. வன விலங்குப் பாதுகாப்பை வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் செய்ய வேண்டும்.

வாகனங்களின் வேகத்தையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும்.

இதனை வலியுறுத்தி, அரசின் கவனத்தை ஈர்க்க மக்கள் போராட்டம் பிப்.10ஆம் தேதி நடத்தப்படும்” என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க:சாலை ஆய்வாளர் நடவடிக்கை: வாழ்வாதாரத்தை இழந்த பெண் தொழிலாளி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.