ETV Bharat / state

பேருந்து நிலையத்திற்குள் இரு சக்கர வாகனங்களுக்குத் தடை!

ஈரோடு: சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திற்குள் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து போக்குவரத்து காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

police investigation
author img

By

Published : Aug 30, 2019, 10:27 AM IST

தமிழ்நாடு கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக சத்தியமங்கலம் பேருந்து நிலையம் உள்ளது. பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் பயணிகள் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் காத்திருந்து தமிழ்நாடு, கர்நாடக அரசுப் பேருந்துகளில் பயணிக்கின்றனர். கோவை, ஈரோடு, சேலம் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள், நகர் பேருந்துகள் நிறுத்தப்படுவதால், பேருந்து நிலையத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதனால், அப்பகுதியில் அதிக விபத்துகள் ஏற்படுகிறது.

இந்நிலையில், இரு சக்கர வாகன ஓட்டிகள் பேருந்து நிற்கும் இடங்களில் நிறுத்துவதனால் பேருந்துகள் நிற்க இடமில்லாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனிடையே, போக்குவரத்து காவல்துறையினர் நேற்றிரவு பேருந்து நிலையத்துக்கு வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் எச்சரிக்கை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பேருந்து நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் நபர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

Intro:Body:tn_erd_03_sathy_no_entry_bus_stand_vis_tn10009

சத்தியமங்கலம் பேருந்து நிலையத்துக்குள் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை

தமிழக கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக சத்தியமங்கலம் பேருந்து நிலையம் உள்ளது. பெங்களூரூ மைசூரு செல்லும் பயணிகள் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் காத்திருந்து தமிழக மற்றும் கர்நாடக அரசு பேருந்துகளில் பயணிக்கின்றனர். மேலும் கோவை, ஈரோடு, சேலம் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள், நகர்ப்பேருந்துகள் நிறுத்தப்படுவதால் பேருந்துநிலையத்தில் கடும் நெரிச்சல் ஏற்படுகிறது. இந்நிலையில், இரு சக்கர வாகன ஓட்டிகள் பேருந்துநிலையத்துக்குள் வந்து செல்லவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் விபத்துக்குள்ளாகின்றனர். இருசக்கரவாகன ஓட்டிகள் வாகனங்களை பேருந்து நிற்கும் இடங்களில் வாகனங்களை நிறுத்திக்கொள்ளவதால் பேருந்துகள் நிற்க இடமில்லாமல் நீண்ட நேரம் காத்திருக்கின்றன. இதனால் வானகங்கள் அணிவகுத்து நிற்பதால் புறப்படும் நேரம் காலதாமமாகிறது. இதை தவிக்கவும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தியும் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பலகை வைத்துள்ளனர். வியாழக்கிழமை இரவு பேருந்து நிலையத்துக்கு வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளை பிடித்து அவர்களிடம் எச்சரிக்கை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முதல்முறையாக எச்சரிக்கையும் அடுத்த முறை அபராதம் விதிக்கப்படும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.