சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் வசிக்கின்றன. இங்கு யானைகள் அவ்வப்போது வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் கடந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்றிரவு சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோவில் அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் சாலையில் சுற்றி திரிந்தன. இதைக்கண்ட வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனத்தை இயக்கினர்.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று யானைகள் நடமாடும் பகுதியில் வாகனங்களை மிகவும் மெதுவாக இயக்குமாறும், யானையின் அருகே ஹாரன் சத்தம் எழுப்பாமல் செல்லுமாறும் வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தி வருகின்றனர். யானைகள் இரவு நேரத்தில் சாலையில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: 'சம்பா பருவத்திற்கான உரம் போதிய அளவு உள்ளது' - வேளாண்துறை இயக்குநர்