ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டாலும் மக்களுக்கு தட்டுப்பாடின்றி காய்கறிகள் மளிகை சாமான்கள் கிடைக்கும் வகையில் சத்தியமங்கலத்தில் தினசரி மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது.
ஐந்து பேருக்கு மேல் அனுமதி கிடையாது என்ற காரணத்தால் மக்கள் தனியாக வந்து பொருள்களை வாங்கிச்செல்கின்றனர். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசரத் தேவைக்கு வெளியில் செல்வோருக்கு மட்டுமே காவல் துறையினர் அனுமதி வழங்குகின்றனர். உரிய காரணமும், முறையான ஆவணங்களும் இல்லாத வாகனங்களை திருப்பி அனுப்பினர்.
மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைபிடிப்பதால், சாலையில் ஓரிரு நபர்களை தவிர சத்தியமங்கலத்தில் உள்ள முக்கிய சாலைகள் வெறிச்சோடியது. அம்மா உணவங்கள் எப்போதும் போல திறக்கப்பட்டு உணவு விநியோகிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவு மீறல்: இளைஞர்களுக்கு தோப்புக்கரணம் தண்டனை