இந்தியாவில் மிகவும் இயற்கை வளமுள்ள புலிகள் காப்பகமாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ளது. காடுகள் வளமாக இருக்க பல வழிகளில் உதவியாக இருக்கும் வனவிலங்குகளை பாதுகாக்கவும் அவைகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வெளியிட்டுள்ளது.
இதில், புலிகள், சிறுத்தை, யானைகள், புள்ளிமான்கள், செந்நாய்கள், கழுத்தைபுலி, புலிகள் காப்பகத்தின் வளமான காடுகளை ட்ரோன் கேமரா மூலம் எடுக்கப்பட்ட அரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் நாகநாதன், மக்களிடையே புலிகள் காப்பகத்தில் என்ன உள்ளன. இதனை எவ்வாறு பாதுகாத்து காடுகளை வளப்படுத்தவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த வீடியோவை உருவாக்கினோம்" என்றார்.
இதையும் படிங்க: கேட்பாரற்று கிடந்த 2 துப்பாக்கிகள் பறிமுதல்: காவல்துறையினர் விசாரணை!