ஈரோட்டில் நேற்று முன்தினம் கே.என்.கே சாலையில் ரவுடிகளுக்கிடையே நடந்த மோதலில் நான்கு பேர் கொண்ட கும்பல் கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரதீப் என்பவரை கத்தியால் குத்தியுள்ளனர். இதில், படுகாயமடைந்த பிரதீப் மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இது தொடர்பாக கொலை செய்த நான்கு குற்றவாளிகளை ஈரோடு கருங்கல்பாளையம் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த நான்கு பேரில் இருவர் கைகள் முறிந்த நிலையிலும், மற்ற இருவர் கால்கள் உடைந்த நிலையிலும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், கொலையான பிரதீப், ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர் என்பதும், அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.