ETV Bharat / state

குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த கொள்ளை - பொதுமக்கள் அச்சம்!

ஈரோடு: குடியிருப்பு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளேயிருந்த 35 சவரன் தங்க நகைகள், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

robbery
robbery
author img

By

Published : Jan 5, 2020, 12:02 AM IST

ஈரோடு நகரின் மையப்பகுதியாகவும் பேருந்து நிலையம் அருகாமையில் அமைந்துள்ள முனிசிபல் காலனி வள்ளலார் வீதிப்பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்மணி செல்வி. கணவரை இழந்த இவர், ஈரோடு மாவட்டம் சித்தோட்டிலுள்ள ஆவின் பாலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்றிரவு குடும்பத்துடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வீட்டைப் பூட்டிவிட்டு சென்ற தமிழ்மணி செல்வி இன்று மதியம் வீடு திரும்பியுள்ளார். வீட்டைத் திறக்க முயற்சித்தவர் வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதையும், வீட்டின் உள்ளே பீரோக்களும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனைத் தொடர்ந்து வீரப்பன்சத்திரம் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்ததையடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களைச் சேகரித்தனர்.

காவல் துறையினர் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் தங்க நகைகள், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது.

வீட்டின் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை

இதனையடுத்து கொள்ளை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குடியிருப்பு மிகுந்த பகுதியில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மூதாட்டி கொலை வழக்கு; மூவருக்கு ஆயுள் - மகிளா நீதிமன்றம் அதிரடி

Intro:ஈரோடு ஆனந்த்
ஜன04

வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை பணம் கொள்ளை!

ஈரோட்டில் குடியிருப்பு மிகுந்த பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளேயிருந்த 35 சவரன் தங்க நகைகள், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளையடித்துள்ளது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஈரோடு நகரின் மையப்பகுதியாகவும் பேருந்து நிலையம் அருகாமையில் அமைந்துள்ள முனிசிபல் காலனி வள்ளலார் வீதிப்பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்மணி செல்வி. கணவரை இழந்த இவர் ஈரோடு மாவட்டம் சித்தோட்டிலுள்ள ஆவின் பாலகத்தில் பணி புரிந்து வருகிறார்.

நேற்றிரவு குடும்பத்துடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வீட்டைப் பூட்டி விட்டு சென்ற தமிழ்மணி செல்வி இன்று மதியம் வீடு திரும்பியுள்ளார். வீட்டைத் திறக்க முயற்சித்தவர் வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதையும், வீட்டின் உள்ளே பீரோக்களும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனைத் தொடர்ந்து வீரப்பன்சத்திரம் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்ததையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களைச் சேகரித்தனர்.

காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் தங்க நகைகள், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து கொள்ளை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Body:குடியிருப்பு மிகுந்துள்ள முனிசிபல் காலனி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருப்பது அப்பகுதியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. Conclusion:மேலும் குடியிருப்பு மிகுந்த பகுதிகளில் காவல்துறையினரின் கண்காணிப்பும், பாதுகாப்பும் இரவு நேரத்தில் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.