ETV Bharat / state

சாலை விபத்தால் கோமா நிலைக்குச் சென்ற பெண்ணுக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு!

ஈரோடு: சாலை விபத்தில் சுயநினைவு இல்லாமல் கோமா நிலைக்குச் சென்ற பெண்ணுக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவிட்டு, அதற்கான உத்தரவை அவசர ஊர்தியில் வந்த பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தேசிய மக்கள் நீதிமன்ற நீதிபதி வழங்கினார்.

ஈரோடு
author img

By

Published : Jul 14, 2019, 10:31 AM IST

சிறுமுகை அடுத்த ராமாபாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி விஜயலட்சுமி (45), மகன் பார்த்தீபன். 2016 ஜனவரி 20ஆம் தேதி விஜயலட்சுமி, பார்த்தீபன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் பவானிசாகர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, தொட்டிபாளையம் என்ற இடத்தில் ஊட்டியைச் சேர்ந்த சிந்தேகுண்டே என்பவரின் கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த விஜயலட்சுமிக்கு, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சைப் பலனின்றி கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இந்த விபத்து குறித்த காரமடை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், பாதிக்கப்பட்ட விஜயலட்சுமி, தனக்கு இழப்பீடூ வழங்க வேண்டும் என சத்தியமங்கலத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுத்த நீதிபதிகள் காப்பீடு நிறுவனம், மனுதாரர் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சார்பு நீதிபதி பி. ஈஸ்வரமூர்த்தி, ஓய்வுபெற்ற நீதிபதி ராமராஜன் ஆகியோர் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு ரூ. 24 லட்சம் இழப்பீடு வழங்க தேசிய காப்பீடு நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர்.

ஈரோடு
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு

இந்நிலையில் அவசர ஊர்தியில் வந்த விஜயலட்சுமிக்கு நீதிமன்ற வளாகத்தில் வைத்து இழப்பீடு தொகைக்கான உத்தரவை நீதிபதிகள் வழங்கினர்.

Intro:இழப்பாடு தொகையை பெற நீதிமன்றத்துக்கு ஆம்புலன்ஸில் வந்த பெண்
சாலை விபத்தில் கோமா பாதிப்பு ஏற்பட்ட பெண்ணுக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு: Body:tn_erd_01a_sathy_court_compensation_photo_tn10009

இழப்பாடு தொகையை பெற நீதிமன்றத்துக்கு ஆம்புலன்ஸில் வந்த பெண்
சாலை விபத்தில் கோமா பாதிப்பு ஏற்பட்ட பெண்ணுக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி ஈஸ்வரமூர்த்தி இழப்பீடு தொகை வழங்கினார்

சாலை விபத்தில் சுயநினைவு இல்லாமல் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட பெண்ணுக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இதற்கான உத்தரவை ஆம்புலன்ஸில் வந்த பாதிக்கப்பட்ட பெண் விஜயலட்சுமியிடம் சார்பு நீதிபதி பி.ஈஸ்வரமூர்த்தி வழங்கினார்.

சிறுமுகை அடுத்த ராமாபாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி விஜயலட்சுமி(45), மகன் பார்த்தீபன். சிறுமுகையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் விஜயலட்சுமி, பார்த்தீபன் ஆகியோர் பவானிசாகர் நோக்கி சென்று கொணடிருந்தனர். பார்த்தீபன் இரு சக்கர வாகனத்தை ஓட்டினார். பின்னால் விஜயலட்சுமி அமர்ந்திருந்தார். அப்போது தொட்டிபாளையம் என்ற இடத்தில் ஊட்டியைச் சேர்ந்த சிந்தேகுண்டே என்பவரின் கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த் காயமடைந்த விஜயலட்சுமி, தனியரா மருத்துவயில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். 2016ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி நடந்த இந்த விபத்து குறித்த வழங்கு காரமடை காவல்நிலையத்தில் வழக்கப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டது. காரின் காப்பீடு நிறுவனம் சம்பவத்தை நேரில சென்று ஆய்வு செய்து காவல்நிலையத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. தற்போது சுயநினைவின்றி கோமா பாதிப்பில் வாழ்ந்து வரும் விஜயலட்சுமி, தனக்கு இழப்பீடூ வழங்க வேண்டும் என சத்தியமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மனு அளித்தார். மனுவின் மீது நடவடிக்கை எடுத்து காப்பீடு நிறுவனம் மற்றும் மனுதாரர் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இதையடுத்து சார்பு நீதிபதி பி.ஈஸ்வரமூர்த்தி, ஒய்வு பெற்ற நீதிபதி ராமராஜன் ஆகியோர் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு வழங்க நேஷனல் காப்பீடு நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர். இந்த உத்தரவை பெறுவதற்கு ஆம்புலன்ஸில் விஜயலட்சுமி அழைத்து வரப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் ஆம்புலன்ஸில் விஜயலட்சுமிக்கு இழப்பீடு தொகைக்கான உத்தரவை நீதிபதிகள் வழங்கினர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.