ETV Bharat / state

சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை - leopard

ஈரோடு: குடியிருப்பு பகுதிக்குள் நடமாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க தாளவாடி கிராம மக்கள் வனத்துறை அலுவலர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

சிறுத்தை நடமாடிய பகுதி
author img

By

Published : Jun 28, 2019, 8:07 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட அண்ணாநகர் கிராமத்தில் விவசாயிகள் மானாவாரி சாகுபடியோடு அதிகளவில் கால்நடைகளும் வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி மாதள்ளி நாயக்கர் என்பவர் தோட்டத்தில் உழவு பணியில் ஈட்டுபட்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று அவரது மாட்டுக்கொட்டகைக்கு சென்றதை பார்த்து கூச்சலிட்டார். கூச்சல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சிறுத்தையை விரட்டினர்.

சிறுத்தை நடமாடிய பகுதி

பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அலுவலர்கள் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நடமாடுவதால், அதனைக் கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் வனத்துறை அலுவலர்களுக்கு கோரிக்கை வைத்தனர்.

Intro:TN_ERD_03_28_SATHY_LEOPARD_ATTACK_VIS_TN10009Body:தாளவாடி அருகே சிறுத்தை நடமாட்டம்: விவசாயிகள் அச்சம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட அண்ணாநகர் கிராமத்தில் மானாவாரி சாகுபடி செய்யப்படுகிறது.இங்கு கால்நடை வளர்ப்பும் அதிகளவில் உள்ளதால் தோட்டத்தில் மாட்டுக்கொட்டகைகளில் ஆடு,மாடுகள் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி மாதள்ளி நாயக்கர் என்பவர் தோட்டத்தில் உழவு பணியில் ஈட்டுபட்டிருந்தார். வனத்தில் வந்த சிறுத்தை ஒன்று மாட்டுக்கொட்டகை நோக்கி சென்று கொண்டிருந்தது. சிறுத்தை பார்த்து அவர் சப்தம் போட்டதால் பக்கத்து தோட்டத்துக்காரர்கள் திரண்டு வந்து கூட்டலிட்டதால் சிறுத்தை பயந்து காட்டுக்குள் சென்று விட்டது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை நடமாடிய பகுதியை ஆய்வு செய்தனர். அதன் கால்தடத்தை ஆய்வு செய்து நடமாடிய பாதையை பின்தொடர்ந்து சிறுத்தை மீண்டும் ஊருக்குள் நுழையாதபடி ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தை நடமாட்டம் காரணமாக தோட்டங்களில் தனியாக நடமாட வேண்டாம் என்றும் குழுவாக சென்று விவசாய பணியை மேற்கொள்ளுமாறு வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.சிறுத்தை நடமாட்டத்தால் கிராமமக்கள் அச்சத்தில் உள்ளனர் Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.