ஈரோடு அக்ரஹாரத்தில், குடியுரிமை திருத்தத் சட்டத்தைக் கண்டித்து மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக, கொங்கு இளைஞர் பேரவைக் கட்சியின் தலைவரும், காங்கேயம் சட்டப்பேரவை உறுப்பினருமான தனியரசு பங்கேற்றார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 'பாஜக துணையில் இருந்து அதிமுக அரசு விலகி வருவதாகவும், வேளாண் பாதுகாப்பு மண்டலம், ஐந்து, எட்டாம் வகுப்பு பொது தேர்வு ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
குடியுரிமை திருத்தத் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்துவோம். நடிகர் ரஜினிகாந்த், பாஜகவின் வஞ்சக வலையில், அதிமுக தலைவர்கள் சிக்க மாட்டார்கள் என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு கண்டனக் கூட்டத்தில் பழ. கருப்பையா பங்கேற்பு