ETV Bharat / state

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. இளம்பெண் அளித்த புகாரில் ஒருவர் கைது! - chennai to mangalore express

Mangalore express sexual harassment: சென்னையில் இருந்து கேரளா நோக்கிச் சென்ற மங்களூரு விரைவு ரயில் முன்பதிவு பெட்டியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வேலூரைச் சேர்ந்த கருணாகரன் என்பவரை புகாரின் அடிப்படையில் ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்.

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் கைது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 3:52 PM IST

ஈரோடு: கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பெண் ஒருவர் சென்னையில் உள்ள தனது கணவரின் உறவினர் வீட்டிற்கு கடந்த 20ஆம் தேதி சென்றுள்ளார். உறவினரின் இறப்பு நிகழ்வில் பங்கேற்றுவிட்டு நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கேரளா வரைச் செல்லும் மங்களூரு விரைவு ரயிலில் முன்பதிவு செய்து அவரது தம்பியுடன் பயணித்து உள்ளார்.

அப்போது அதே முன்பதிவு பெட்டியில் இளம்பெண்ணின் இருக்கைக்கு எதிரே அமர்ந்திருந்த காட்பாடி வேலூர் பகுதியைச் சேர்ந்த கருணாகரன் என்பவர் நள்ளிரவில் ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து மங்களூரு விரைவு ரயில், ஈரோடு ரயில் நிலையத்தை சென்றடைந்தபோது இளம்பெண் மற்றும் அவரது தம்பி இருவரும் ஈரோடு ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையத்தில் புகார் இது குறித்து அளித்தார்.

புகாரின் அடிப்படையில் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்னர் பாலியல் தொந்தரவு அளித்த கருணாகரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஒரே மாதிரி கல்வி நிறுவத்தின் பெயரை வைப்பதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் கிடுக்குபிடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.