ETV Bharat / state

இரண்டாம்போக பாசனம்: தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை - பவானி சாகர் அணை

ஈரோடு: தமிழ்நாட்டில் மழை பெய்யாத நிலையிலும் தொடர்ந்து முழுக் கொள்ளளவுடன் நீடிக்கும் பவானிசாகர் அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசுக்குப் பொதுப்பணித் துறை பரிந்துரை செய்துள்ளது.

The Bhawanisagar Dam
The Bhawanisagar Dam
author img

By

Published : Jan 6, 2020, 9:28 AM IST

Updated : Jan 6, 2020, 2:35 PM IST

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இந்த அணையின் மூலம் பாசன வசதி பெறுகின்றன. இவை தஞ்சை டெல்டா பாசனத்திற்கு அடுத்தபடியாக அதிக பாசனப் பரப்பளவை கொண்டதாகும்.

அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி, வட கேரளா ஆகிய இடங்களில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் சென்ற ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டியது. இதைத் தொடர்ந்து, அணையிலிருந்து பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. உபரிநீர் பவானி ஆறு, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்காகத் திறந்துவிடப்பட்டது.

நீலகிரி பில்லூர் அணையிலிருந்து தினந்தோறும் மின் உற்பத்திக்கு தண்ணீர் வெளியேற்றப்படுவதாலும், அதிக நீர்வரத்தின் காரணமாகவும் 54 நாள்களாக அணை தொடர்ந்து முழு கொள்ளளவுடன் நீடித்துவருகிறது. இதற்கிடையே சில நாள்கள் நீர்வரத்து குறைந்தபோதிலும், அணையின் நீர்மட்டம் அரை அடி சரிவதும், பின் மீண்டும் உயருவதுமாக இருந்தது.

பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசுக்குப் பொதுப்பணித் துறை பரிந்துரை

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவுடன் நீடிப்பதால் அணையிலிருந்து எள், கடலை போன்ற பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, பொதுப்பணித் துறையினர் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளனர். இதன் மூலம் கீழ்பவானி வாய்க்காலில் 1 லட்சத்து 3500 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறுமென்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை - வானிலை ஆய்வு மையம்!

Intro:Body:tn_erd_03_sathy_bhavanisagar_dam_vis_tn10009

மழை இல்லாத நிலையிலும் தொடர்ந்து முழுகொள்ளளவுடன் நீடிக்கும் பவானிசாகர் அணை
இரண்டாம் போக தண்ணீர் திறக்க தமிழகஅரசுக்கு பொதுப்பணித்துறை பரிந்துரை

மழையளவு குறைந்தபோதிலும் தொடர்ந்து முழுகொள்ளவான 105 அடியுடன் பவானிசாகர் அணை நீடிப்பதால் கீழ்பவானி வாய்க்கால் இரண்டாம் போக கடலை, எள் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறைு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்கள் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இந்த அணையின் மூலம் பாசன வசதி பெறுகின்றன. தஞ்சை டெல்டா பாசனத்திற்கு அடுத்தபடியாக அதிக பாசனப்பரப்பளவை கொண்டதாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வடகேரளாவில் பெய்த பலத்த மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால் நவ.8ம் தேதி அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டியதை தொடர்ந்து அணையிலிருந்து பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. அணைக்கு வரும் உபரிநீர் பவானிஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு திறந்துவிடப்பட்டது. நீலகிரி பில்லூர் அணையில் இருந்து தினந்தோறும் மின் உற்பத்திக்கு தண்ணீர் வெளியேற்றப்படுவதாலும் அணைக்கு நீர்வரத்து காரணமாகவும் நவ 8ம் தேதி முதல் தற்போது வரை 54 நாள் அணை தொடர்ந்து முழு கொள்ளளவுடன் நீடிக்கிறது. இதற்கிடையே சில நாள்கள் நீர்வரத்து குறைந்தபோதிலும் அணையின் நீர்மட்டம் அரை அடி மட்டுமே சரிவுதும் மீண்டும் உயருவதுமாக இருந்தது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவுடன் நீடிப்பதால் அணையில் இருந்து இரண்டாம் போக எள்,கடலை போன்ற பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தையடுத்து பொதுப்பணிதுறையினர் அரசு பரிந்துரை செய்துள்ளனர். இதன் மூலம் கீழ்பவானி வாய்க்காலில் 1 லட்சத்து 3500 ஏக்கர் விளைநிலங்களும் பாசனம் தடப்பள்ளி அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்காலில் 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 120 நாள்கள் விட்டு விட்டு தண்ணீர் திறப்பதின் மூலம் 24 டிஎம்சி தண்ணீர் வெளியேற்றப்படும். பவானிசாகர் அணையின் நீர்மட்டம் விபரம்: அணையின்நீர்மட்டம் 105 அடி, நீர் இருப்பு 32.8 டிஎம்சி, உபரிநீர்வரத்து 912 கனஅடியாகவும் வெளியேறறம் 912 கனஅடியாக வெளியேற்றப்படுகிறது.Conclusion:
Last Updated : Jan 6, 2020, 2:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.