ETV Bharat / state

மீண்டும் தவறாகப்பேசி சர்ச்சையில் சிக்கிய பிரேமலதா! - ஈரோடு

ஈரோடு: திருப்பூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் குறித்து தவறான தகவலை வெளியிட்டு தேமுதிக பொருளாளர் பிரேமலதா மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பிரேமலதா
author img

By

Published : Mar 30, 2019, 1:32 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். கோபி பேருந்து நிலையம் முன் திருப்பூர் தொகுதியில் கூட்டணிக்கட்சியான அதிமுக சார்பில் போட்டியிடும் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

அப்போது பிரேமலதா பேசுகையில், தற்போது திருப்பூர் மக்களவைத் தொகுதியில் எம்.பியாகஉள்ள எம்.எஸ்.எம்.ஆனந்தனை, மீண்டும் மக்கள் எம்.பியாக தேர்தெடுக்க வாக்களிக்க வேண்டும் என்றார். ஆனால், அந்த தொகுதியில் அதிமுகவின் சத்தியபாமா என்பவர்தான் தற்போது எம்.பியாக இருக்கிறார். இந்த அடிப்படை விவரம் கூட தெரியாமல் பிரேமலதா பரப்புரை மேற்கொண்டது தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே, புல்வமா தாக்குதலை நடத்தியது பிரதமர் மோடிதான் என தவறாக பேசி பிரேமலதா சர்ச்சையில் சிக்கியிருந்த நிலையில், தற்போது மீண்டும் தவறாகப்பேசி அரசியல் நோக்கர்களிடம் வசமாக சிக்கியுள்ளார்.

தற்போதைய திருப்பூர் மக்களவை அதிமுக வேட்பாளர் எம்எஸ்எம் ஆனந்தன் மீண்டும் போட்டியிடுகிறார் என தவறாக பேசிய பிரேம லதா

எம்எஸ்எம் ஆனந்தம் முதன்முறையாக எம்பி தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது கூட தெரியாத பிரேமலதா

TN_ERD_SATHY_01_30_PREMALATHY_VIS_TN10009  

கோபிசெட்டிபாளையம் பேருந்துநிலையம் முன்பு திருப்பூர் திருப்பூர் நாடாளுமன்ற தொகுயில் அதிமுக சார்பில் போட்டியிடும் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு வாக்கு சேகரித்து கூட்டணி கட்சியான தேமுதிக பொருளாளர் பிரேமலதா வாக்கு சேகரித்து பரப்புரையில் ஈடுபட்டார்…

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்துநிலையம் முன்பு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு வாக்கு சேகரித்து கூட்டணி கட்சியான தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா பரப்புரை மேற்கொண்டார். பிரேமலதா பேசுகையில் தற்போது திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.பியாக உள்ளதாகவும் மீண்டும் அவரை எம்.பியாக தேர்தெடுக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் தற்போது எம்.பி சத்தியபாமா என்பது கூட தெரியாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது தொண்டர்களிடம் வருத்தத்தை உண்டுபண்யது. இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து பேசுகையில் அதிமுகவில் ஏற்படுத்தியுள்ள கூட்டணி பலமான கூட்டணி என்றும் இக்கூட்டணி அமையக்கூடாது என்று திமுக பல்வேறு சூழ்சிகளை செய்ததாகவும் அதையொல்லாம் முறியடித்து மாபெரும் வெற்றிக்கூட்டணியாக அமைந்துள்ளதாகவும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் இக்கூட்டணி வேட்பாளர்கள் அமோகமாக வெற்றிபெருவார்கள் எனவும் தெரிவித்தார். மேலும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக உள்ள கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து கட்சியில் விசுவாசமாக இருந்து கட்சிகாக பாடுபட்டவர் எனவும் அமைச்சர் என்றால் இவரைபோல் இருக்கவேண்டும் என்று புகழாரம் சூட்டினார். அவர் உண்டு அவர் வேலையுண்டு இருக்கும் அமைச்சர் என்றும் தெரிவித்தார். இக்கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் நரேந்திரமோடி ஆட்சி அமையும் எனவும் அப்போது நதிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து நதிகளை இணைப்போம் எனவும் சிறு குறு வியாபாரிகள் ஜி.எஸ்.டியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜி.எஸ்.டியை மறு பரிசீலனை செய்யுமாறும் வலியுறுத்துவோம் என்றும் தமிழகத்திற்கு தேவையான அனைத்து நல்ல திட்டங்களை பெற்றுத்தருவோம் என்றும் வாக்குறுதியளித்துள்ளார். பிரதம் நரேந்திரமேடி வெளிநாடுகளுக்கு அதிகளவு செல்கிறார் என்றும் அனைவரும் குற்றம் சுமத்தினர். தற்போது இந்தியாவின் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்றும் மக்களாகிய உங்களுக்கு தெரியும் எனவும் அமெரிக்கா ர~;யா சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக வல்லரசு நாடாக இந்தியா உருவாகியுள்ளது. எனவும் அதற்கு காரணம் பிரதமர் நரேந்திமோடி தான எனவும் தெரிவித்தார். முன்னதாக பிரேமலதாவிற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் வேட்பாளர் ஆனந்தன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். 
--

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.