ETV Bharat / state

“பதவியில் இருந்தால் அமைச்சரை உள்ளே வைத்து இருப்பேன்” -பொன் மாணிக்கவேல் - இந்து சமய அறநிலையத் துறை

நான் மட்டும் மீண்டும் அதே பொறுப்பில் அமர்த்தப்பட்டால் அறநிலையத் துறை அமைச்சர் உள்பட துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் தூக்கி உள்ளே வைத்துவிடுவேன் என்று முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

ex ig Ponmanikavel
பொன் மாணிக்கவேல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2024, 6:21 PM IST

Updated : Jan 1, 2024, 6:47 PM IST

பொன் மாணிக்கவேல் பேட்டி

ஈரோடு: இந்து முன்னணி சார்பில் சென்னிமலைசுப்பிரமணிய சுவாமி கோயில் இருந்து பனிமலை கோயில் வரை வேல் யாத்திரை கொண்டு செல்லும் வகையில் வேல் வழிபாடு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதினங்கள், திரைப்பட நடிகர்கள் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

சுப்பிரமணிய சுவாமி கோயில், கொடி மரம் முன்பு முருகனின் வேலுக்குச் சிறப்பு பூஜைகள் செய்து திருவாசகம் பாடி வழிபாடு செய்தனர். இதையடுத்து சென்னிமலை கோவிலிருந்து வேல் யாத்திரை மூலம் பழனிமலை கோவிலுக்கு யாத்திரை சென்றனர்.

இதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் பேசுகையில் ”இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்கள் மூலம் 28 கோடி ரூபாய் அரசு வருமானம் ஈட்டி வருகிறது.கோயில் உண்டியலில் வருவதெல்லாம் குறைந்த அளவுதான். கோயில் சொத்துக்கள் மூலம் வரும் வருமானம்தான் மிகவும் அதிகம்.

8 மாதங்களில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடங்கள் மூலம் வந்த வாடகைப் பணம் பாக்கி மட்டும் 151 கோடி ரூபாய். அர்ச்சகர்கள் இல்லை என்றால், கோயில் சொத்துகள் சூறையாடப்படும். எந்த வேலையில் செய்யாத அதிகாரிகளுக்கு மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பளம், எல்லா பணிகளையும் மேற்கொள்ளும் அர்ச்சகர்களுக்கு 4500 ரூபாய் சம்பளம்.

இந்து அறநிலையத்துறைக்கு என்று செத்து என்று ஏதும் கிடையாது, சைவ வைணவ கோயில் சொத்துக்கள் 4லட்சத்து 78ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளிட்ட ஏராளமான சொத்துக்கள் இந்து அறநிலை துறைக்கு உள்ள நிலையில் தாங்கள் போடுவதாகத் தவறான தகவல்களை அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

அரச பொறுத்த வரை எந்த ஒரு நிதியும் ஒதுக்கீடு செய்து கோயில்களைப் பராமரிப்பதில்லை . இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் அதிகாரிகள் அரசு ஊழியர்கள் கிடையாது கோவில்களின் சேவகர்களாகக் கருதப்படுவார்கள்.

கோவில் திருப்பணி போது ஒவ்வொரு பணிக்கும் கமிஷன் பெறப்படுகிறது. புறநானிப்பு என்ற பெயரில் கோவில்களில் உள்ள தொன்மையான கல்வெட்டுகள் அளிக்கப்படுகிறது.இதனால் கோயில் திருப்பணிகள் மற்றும் புரனையமைப்பு பணிகளை மாநில தொல்லியல் துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

அப்படி அவர்கள் செய்வதன் மூலம் கோயில்களின் பழமையான தொன்மை பாதுகாக்கப்படும்.தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையில் இதே நிலைமை நீடித்தால் வரும் 15 ஆண்டுகளில் 26 ஆயிரம் கோவில்களில் கடந்த பல வருடங்களாகப் பராமரிக்க அர்ச்சகர்கள் இல்லாத நிலை உருவாகும்.

2012 ஆம் வருடம் மட்டும் அமெரிக்க நியூயார்க் நகரிலிருந்து 2 ஆயிரத்து 662 சிலைகள் மீட்கப்பட்டுள்ள. இந்த சிலைகள் மதிப்பு ஆயிரத்து 20கோடி ரூபாயாக கருதப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள சிலைகளை தமிழக அரசு மத்திய அரசு மூலம் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தூங்காமல் விழித்துக் கொள்ள வேண்டும். 38ஆயிரத்துக்கு மேல் கோயில்கள் உள்ள நிலையில் ஒரு கோவிலுக்குக் கூட வராத முதல்வர் வேண்டாம். நான் மட்டும் மீண்டும் ஐஜி பொறுப்பிலிருந்து வேலை பார்த்தால் இந்து அறநிலையத்துறை அமைச்சர் உட்பட அனைவரையும் உள்ளே வைத்து விடுவேன் என்று கூறினார்.

இதையும் படிங்க: வேலூரில் களைகட்டிய புத்தாண்டு… பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய போலீஸ் எஸ்பி!

Last Updated : Jan 1, 2024, 6:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.