ETV Bharat / state

ஈரோடு ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டத்தில் கல் வீச்சா? - நடந்தது என்ன? - தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் பேரணி

Erode RSS Parade: ஈரோடு அடுத்த சத்தியமங்கலத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் பொதுக்கூட்ட மேடை அருகே, கல்வீச்சு நடைபெற்றதாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2023, 7:29 AM IST

ஈரோடு: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், ராஷ்டிரீய ஸ்வயம் சேவக சங்கம் (RSS) அமைப்பின் சார்பில், அந்த அமைப்பின் கொள்கைகளை வலியுறுத்தும் வகையில் சீறுடை அணிந்து பேரணி நிகழ்ச்சி நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் நடைபெற்ற பேரணியில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பங்கேற்றனர்.

நகரின் முக்கிய சாலைகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மேற்கொள்ளும் பேரணிக்காக, ஈரோடு நகர காவல் துறை கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில் 425க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், ஈரோடு அடுத்த சத்தியமங்கலத்திலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் பேரணி நடைபெற்றது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 99வது ஆண்டு துவக்க விழாவையொட்டி நடைபெற்ற பேரணியில், ஏராளமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பங்கேற்றனர். அந்த பேரணியை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த உறுப்பினர் கே.எம்.பச்சியப்பன் என்பவர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

அதனை அடுத்து, ரங்கசமுத்திரம் எஸ்.ஆர்.டி.கார்னரில் பகுதியில் இருந்து புறப்பட்ட சேவா சங்க உறுப்பினர்கள் பேரணி, மைசூர் தேசிய நெடுஞ்சாலை, புதிய பாலம், அத்தாணி சாலை வழியாக திப்புசுல்தான் சாலையை சென்றடைந்தது. பேரணியாகச் சென்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் மீது அவ்வமைப்பின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் மலர் தூவி வரவேற்றனர்.

இதையும் படிங்க: நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் ராபின் டிராவல்ஸ்-க்கு 70 ஆயிரம் அபராதம்: கேரளா மோட்டார் வாகனத்துறை அதிரடி!

அதன் பின்னர், திப்புசுல்தான் சாலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது மேடை அருகே இருந்த மரத்தின் மீது இருந்து கல் சாலையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. அதனை அடுத்து சப்தம் கேட்டு சுதாரித்துக் கொண்ட காவல் துறையினர். அப்பகுதி முழுக்க சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனைக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுக் கூட்ட நிகழ்விற்கும், கல்வீச்சுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டது. இருப்பினும், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர், பைனாகுலர் மூலம் மேடையைச் சுற்றி உள்ள பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அதனை அடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், பொதுக் கூட்ட மேடை அருகே கல்வீச்சு சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடத்தில் சோதனை மேற்கொண்டார். இதனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டிருந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதையும் படிங்க: "நாற்பதும் நமதே" விழுப்புரம் சென்றடைந்த இருசக்கர வாகன பேரணிக்கு உற்சாக வரவேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.