ETV Bharat / state

நடவு வயலான மண்சாலை - எதிர்ப்பை வெளிப்படுத்திய மக்கள்!

author img

By

Published : Nov 1, 2019, 11:44 PM IST

ஈரோடு: சேரும், சகதியுமாக உள்ள சாலையை சீரமைத்து தரக்கோரி கிராம மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாற்று நடும் கிராம மக்கள்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் பேரூராட்சிக்குட்பட்ட பூலமேடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மண் சாலை மட்டுமே போக்குவரத்திற்காக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் இந்த சாலை சேரும் சகதியுமாகி நடக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இரவு நேரங்களில் மிகுந்த கவனத்துடன் சென்றாலும், சகதியில் விழுந்து காயங்கள் ஏற்படும் நிலை உள்ளதால், மண் சாலையை தார் சாலையாக மாற்றித் தரவேண்டும் என அப்பகுதி மக்கள், பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் பேரூராட்சி அலுவலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தியடைந்த அப்பகுதி மக்கள் சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாற்று நடும் கிராம மக்கள்

மேலும் இப்போராட்டத்திற்கு பிறகும் சாலையை சீரமைக்காவிட்டால் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வேளாண் ஒப்பந்தச் சட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு!

Intro:Body:tn_erd_01_sathy_road_damage_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் பேரூராட்சிக்குட்பட்ட பூலமேடு பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சரியான சாலை வசதியில்லை எனக்கோரியும் தற்போது உள்ள மண் சாலை சேறும் சகதியுமாக உள்ளதாக்கூறி அப்பகுதி பொதுமக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் பேரூராட்சிக்குட்பட்ட பூலமேடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு தடப்பள்ளி கொப்பு வாய்க்கால் கரைப்பகுதியில் செல்லும் மண் சாலை மட்டுமே உள்ளது. இதனால் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் பகுதிக்கு சாலை வசதி வேண்டும் என்றும் தற்போதுள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்றம் செய்து தரவேண்டும் என்றும் கூகலூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கும் பொதுப்பணித்துறைக்கு மனு அளித்துவருகின்றனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் தற்போது கடந்த ஒரு மாதங்களாக பெய்து வரும் மழையினால் மண் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளதாகவும் இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் கடந்த வாரத்தில் இரு பள்ளி மாணவிகள் சாலையில் உள்ள சகதியில் சிக்சி இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் நோயாளிகளை அழைத்துச்செல்ல அவசர ஊர்திகளும் தங்கள் பகுதிக்கு வருவதில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் சேறும் சகதியுமாக உள்ள சாலையில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை கொண்டு செல்லமுடியாமல் அவதியுற்றுவருவதாகவும் இரவு நேரங்களில் சாலையில் பாம்பு தேள் உள்ளிட்ட வி~ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் அதனால் இச்சாலையை சீரமைத்து தார் சாலையாக மாற்றம் செய்யவேண்டும் என கோரிக்கைவைத்து சாலையில் தற்போதுள்ள சேறு மற்றும் சகதியில் அப்பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு பிறகும் சாலையை சீரமைக்கவிட்டால் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்துள்ளனர். தமிழக அரசு துரித கதியில் செயல்பட்டு தண்ணீர்பந்தல்புதூர் சாலையிலிருந்து தடப்பள்ளி கொப்பு வாய்க்கால் வழியாக செல்லும் 2 கிலோ மீட்டர் சாலையை சீரமைக்கவேண்டும் என கோரிக்கைவைத்துள்ளனர்…
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.