ETV Bharat / state

மறு வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை கேட்டு குவியும் மனுக்கள்! - petition increase for re counting in erode local body election

ஈரோடு: மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் குவிந்துள்ளன.

ஈரோடு மாவட்டச் செய்திகள்  ஈரோட்டில் மறு தேர்தல் நடத்த மாவட்ட ஆட்சியரிடம் மனு  petition increase for re counting in erode local body election  மறு வாக்கு எண்ணிக்கை கேட்டு குவியும் மனுக்கள்
மறு வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை கேட்டு குவியும் மனுக்கள்
author img

By

Published : Jan 4, 2020, 9:19 PM IST

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரையில் 19 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 14 இடங்களையும் திமுக 5 இடங்களையும் கைப்பற்றியது. 183 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 101 இடங்களையும் திமுக 61 இடங்களையும் கைப்பற்றியது.

இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்பாளர்கள் வந்த வண்ணமாய் உள்ளனர். டி.என். பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமுகை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரகாஷ் சாதிச் சான்றிதழில் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மறு வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை கேட்டு குவியும் மனுக்கள்

தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிரகாஷ் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். பிரகாஷ் முறைகேடாகச் சான்றிதழ் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும், அதனை ரத்து செய்துவிட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும் எனவும் அந்த ஊராட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதேபோல் சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் குட்டப்பாளையம் ஊராட்சி மன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி உள்ளதால் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என அப்பகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கூட்டணித்துரோகம்.. தேமுதிக வேட்பாளரின் சுவரொட்டியால் பரபரப்பு

Intro:ஈரோடு ஆனந்த்
ஜன04

மறு வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை கேட்டு குவியும் மனுக்கள்!

மறு வாக்குப்பதிவு மற்றும் மறு வாக்கு எண்ணிக்கை கோரி அடுத்தடுத்து வரும் மனுக்களால் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரையில் 19 மாவட்ட கவுன்சிலர் பதவியில் அதிமுக 14, திமுக 5 இடங்களை கைப்பற்றியது. 183 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் அதிமுக 101, திமுக 61 இடங்களை கைப்பற்றியது.

இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வண்ணய் உள்ளனர்.

டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமுகை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரகாஷ் ஜாதிசான்றிதழில் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பிரகாஷ் வெற்றிபெற்றுள்ளார்.

Body:பிரகாஷ் முறைகேடாக சான்றிதழ் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும் எனவே இதனை ரத்து செய்துவிட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று அங்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Conclusion:இதேபோல் சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் குட்டப்பாளையம் ஊராட்சி மன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி உள்ளதால் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.