ETV Bharat / state

ஈரோட்டில் பிரபல ஆயில் நிறுவனத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காண மக்கள் கோரிக்கை! - Erode oil factory

Erode oil factory: சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் தனியார் ஆயில் ஆலைக்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது எனக் கூறி, ஈரோடு அருகே பாதிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

ஈரோட்டில் பிரபல ஆயில் நிறுவனத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காண மக்கள் கோரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 1:46 PM IST

ஈரோட்டில் பிரபல ஆயில் நிறுவனத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காண மக்கள் கோரிக்கை!

ஈரோடு: தமிழகத்தின் பிரபல தனியார் ஆயில் நிறுவனம், ஈரோட்டை அடுத்த மூலக்கரை கிராமத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு தயார் செய்யப்படும் எண்ணெய்கள், இந்தியா மட்டுமில்லாமல் வெளி நாடுகளிலும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆலையில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேறும் கழிவுகளால், அப்பகுதியைச் சுற்றியுள்ள கூறப்பாளையம் , கதிரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீர், கிணறு, ஆழ்துளைக் கிணறு போன்றவைகளும் மாசடைந்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதேபோல, இந்த ஆலையில் இருந்து வெளியேறும் புகையின் காரணமாக காற்று மாசடைந்து வருதாக கூறும் கிராம மக்கள், பல்வேறு சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த தனியார் ஆலைக்கு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என்றும், இது தொடர்பாக அவசரக் கூட்டம் நடத்த வேண்டும் எனக் கூறி ஊராட்சி தலைவரிடம் மனு அளித்தனர்.

மேலும், சம்பந்தப்பட்ட தனியார் ஆலையில் உரிய ஆய்வு மேற்கொண்டு, சுத்திகரிக்கப்படாமல் கழிவுகள் வெளியேற்றுவதை தடுத்து நிறுத்தி, சுத்தமான காற்று மற்றும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அப்பகுதியில் வசித்து வரும் நல்லசாமி கூறுகையில், “இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் காற்று மற்றும் நீர் மாசுபாடு அடைகிறது.

கடந்த 80 ஆண்டு காலமாக இந்த பகுதியில்தான் விவசாயம் செய்து வருகிறோம், எங்களுக்கு வேறு வாழ்வாதாரம் எதுவும் இல்லை. விவசாயம் மற்றும் கால்நடைகள் சார்ந்த தொழிலை நம்பிதான் நாங்கள் இருக்கிறோம். எங்களுக்கு சுத்தமான நீர் மற்றும் காற்று வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: Unfollow செய்துவிடுங்கள்..! போலி கணக்கு விவகாரம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.