ETV Bharat / state

முள்புதரில் உயிரிழந்து கிடந்த மயில்கள் - விசாரிக்கும் வனத்துறை

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டூர் எஸ்.பி. நகரின் பின்பகுதியில் முள்புதரில் இரண்டு மயில்கள் உயிரிழந்து கிடந்தன. அவற்றை வனத்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Peacocks death in gopichettipalayam
Peacocks death in gopichettipalayam
author img

By

Published : Jun 9, 2020, 12:19 AM IST

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டூர் எஸ்.பி. நகர்ப் பகுதியில் வேலிமுட்புதரில் மயில்கள் இரண்டு உயிரிழந்து கிடந்தன. அவற்றைப் பார்த்த அப்பகுதி மக்கள் தூக்கநாயக்கன்பாளையம், வனச்சரக அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறை அலுவலர்கள் உயிரிழந்து கிடந்த இரு மயில்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மயில்கள் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயத் தோட்டங்களில் விஷம் வைத்ததால் மயில்கள் உயிரிழந்துள்ளனவா அல்லது மின்கம்பியில் சிக்கி உயிரிழந்தனவா அல்லது வேட்டையாடுவதற்காக மயில்கள் கொல்லப்பட்டனவா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயில்களை உடற்கூறு ஆய்வு செய்தபின்னர், மயில்களின் உயிரிழப்பு குறித்து காரணம் தெரியவரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.