ஈரோடு: தாளவாடி மலைப்பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் சத்தியமங்கலம், கோவை, ஈரோடு, திருப்பூர், மற்றும் கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர், மைசூர் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல தாளவாடி பேருந்து நிலையம் வந்து தான் செல்ல வேண்டும்.
இதனால் தாளவாடி பேருந்து நிலையம் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில், கடந்த சில நாள்களாக குடிமகன்கள் குடித்துவிட்டு போதையில் பேருந்து நிலையத்தில் படுத்து உறங்குவதும், ரகளையில் ஈடுபடுவதும் தொடர் கதையாகி வருகிறது.
அதேபோல், பேருந்து நிலையத்தில் ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்பொழுது அங்கு வந்த 50 வயது மிக்க குடிமகன் குடிபோதையில் தள்ளாடியபடியே பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் மீது விழுந்தார்.
அங்கிருந்த பெண்களிடம் தகாத வார்த்தையில் பேசி வம்பு இழுத்தார். இதைப்பார்த்த வயதான மூதாட்டி ஒருவர் குச்சியை எடுத்து அவரை விரட்டினார். பேருந்து நிலையத்தில் குடிமகன்களால் தினம் தினம் பெண்கள், பள்ளி மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; பாதுகாப்பிற்காக காவலர்களை அங்கு நிறுத்த வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: எட்டு மாத கர்ப்பிணியை வயிற்றில் எட்டி உதைத்த கொடூரச்சம்பவம்... திரிணாமுல் எம்எல்ஏவிற்குத் தொடர்பு