ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொத்தம் 160 குழந்தைகள் படித்து வருகின்றனர். ஆனால், இப்பள்ளியில் கடந்த ஓராண்டாக ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் இருப்பதாகவும், ஆசிரியர் பற்றாக்குறையால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகப் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, கல்வித் துறை அலுவலர்களிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்தனர். எனவே, குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு அரசும், மாவட்ட நிர்வாகமும் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் வந்து பெற்றோர்கள் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: அரசுப் பள்ளியில் மாணவி உயிரிழப்பு - இறப்பில் சந்தேகத்தைக் கிளப்பும் பெற்றோர்!