நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள ஆறு உறுப்பினர்களில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் தலா மூன்று இடங்களைப் பெற்றனர்.
இதனால் கவுன்சிலர்கள் சமநிலையில் இருப்பதால் தலைவர் தேர்தலில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில் தலைவரை தேர்ந்தெடுக்க ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற இருந்த தேர்தல் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று மூன்றாவது முறையாக ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுக உறுப்பினர்கள் மூன்று பேர் வந்து காத்திருந்தனர். ஒதுக்கப்பட்ட நேரம் முடியும்வரை அதிமுக உறுப்பினர்கள் யாரும் வரவில்லை. இதனால் மூன்றாவது முறையாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க... நொறுங்கிப்போன முறுக்குத் தொழில்! - நொந்துபோன தொழிலாளர்கள்