ETV Bharat / state

கிராமசபைக்கூட்டத்தில் நெகிழ்ச்சி; தூய்மைப்பணியாளர்கள் காலில் விழுந்த ஊராட்சித்தலைவர் - ஈரோடு

தூய்மைப்பணியாளர்கள் காலில் விழுந்து மரியாதை செலுத்திய மாக்கினாங்கோம்பை ஊராட்சித்தலைவர் ஈஸ்வரனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிராமசபை கூட்டத்தில் நெகிழ்ச்சி
கிராமசபை கூட்டத்தில் நெகிழ்ச்சி
author img

By

Published : Nov 1, 2022, 9:55 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த மாக்கினாங்கோம்பை ஊராட்சியில் இன்று கிராம சபைக்கூட்டம் ஊராட்சித் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மழைக்காலத்தில் மின்கம்பிகளைத் தொடக்கூடாது; மின்வயர் அறுந்துகிடந்தால் தகவல் தெரிவிக்கவும்; மின்கம்பம் பழுதாகியிருந்தாதலும் உடனடியாக செல்போனில் தெரிவிக்குமாறு மின்துறை அலுவலர்கள் அறிவுரைகள் வழங்கினர்.

அதைத்தொடர்ந்து கரோனா காலத்தில் விடுமுறையின்றி, கிராமத்தில் தூய்மைப்பணியில் ஈடுபட்டு, மக்கள் வாழ தங்களது உயிரைப் பணயம் வைத்து சிறப்பாகப்பணியாற்றிய 20 தூய்மைப்பணியாளர்களுக்கு பாராட்டுத் தெரிவித்து, தூய்மைப்பணியாளர்கள் காலில் விழுந்து, மாக்கினாங்கோம்பை ஊராட்சித்தலைவர் ஈஸ்வரன் வணங்கினார்.

கிராமசபை கூட்டத்தில் நெகிழ்ச்சி
கிராமசபைக்கூட்டத்தில் நெகிழ்ச்சி; தூய்மைப்பணியாளர்கள் காலில் விழுந்த ஊராட்சித்தலைவர்

இச்சம்பவம் தூய்மைப்பணியாளர்கள் மட்டுமின்றி கிராம மக்களிடையேயும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: குழந்தைகள் காலை உணவை தவிர்க்க வேண்டாம் – யுனிசெப் அறிவுரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.