ETV Bharat / state

ஓய்வுபெற்ற வன ஊழியர் யானை தாக்கி பலி! - ஆசனூர் வனப்பகுதி

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் ஓய்வுபெற்ற வன ஊழியர் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யானை தாக்கி பலி
author img

By

Published : Jun 10, 2019, 5:20 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூர் அரேப்பாளையத்தை சேர்ந்தவர் தவசியப்பன் (60). ஓய்வுபெற்ற வனக்காவலரான இவர், வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து மேய்த்து வந்தார். இந்நிலையில் நேற்று ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார்.

இதனையடுத்து மாலை ஆடு, மாடுகள் வீடு திரும்பிய நிலையில், தவசியப்பன் வீடு திரும்பவில்லை. அவர் வீடு திரும்பாததால் பதட்டமான உறவினர்கள் வனப்பகுதிகளில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் தவசியப்பனை காணவில்லை, பின்னர் இன்று காலை அரேப்பாளையம் பள்ளத்தை அடுத்த அடர்ந்த காட்டில் அவர் சடலமாக கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சடலத்தை மீட்டு ஆய்வு செய்தபோது, யானை தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது.

பின்னர் அவரது உடலை உடற்கூறாய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யானை தாக்கி உயிரிழந்த தவசியப்பன் குடும்பத்துக்கு முதற்கட்ட நிவாரணமாக ரூ.50 ஆயிரம் வனத்துறையினர் சார்பாக வழங்கப்பட்டது.

ஆசனூர் வனத்தில் யானை தாக்கி ஓய்வு பெற்ற வனஊழியர் தவசியப்பன் உயிரிழப்பு  
--
;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216
 
TN_ERD_02_10_SATHY_ELEPHANT_ATTACK_DEATH__VIS_TN10009

(Visual  FTP இல் உள்ளது)

ஆசனூர் வனத்தில் யானை தாக்கி ஓய்வு பெற்ற வனஊழியர் தவசியப்பன் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் வனப்பகுதி அரேப்பாளையத்தில் நேற்று மாடு மேய்க்க சென்ற தவசியப்பன் காணாமல் போனார்.  உறவினர் அவரை தேடியபோது யானை தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அரேப்பாளையத்தைச் சேர்ந்தவர் தவசியப்பன்(60). ஓய்வு பெற்ற வனக்காவலர். இவர் வீட்டில் ஆடு,மாடுகள் வளர்த்து வந்தார். நேற்று வழக்கம்போல அரேப்பாளையம் வனப்பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். மாடுகள் வீடு திரும்பிய நிலையில், தவசியப்பனை காணவில்லை. உறவினர்கள் காட்டுக்கு சென்று தேடிப்பார்த்தனர். இன்று காலை வரை தவசியப்பன் வராதது குறித்து உறவினர்கள் கவலை அடைந்தனர்.  காணாமல் போன தவசியப்பனை இன்று காலை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். அப்போது அரேப்பாளையம் பள்ளத்தை அடுத்த அடர்ந்த காட்டில் சடலமாக கிடப்பது தெரியவந்தது. இது குறித்து ஆசனூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினர் சடலத்தை மீட்டு ஆய்வு செய்தபோது யானை தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. யானை தாக்கி  உயிரிழந்த தவசியப்பன் குடும்பத்துக்கு முதற்கட்ட நிவரணமாக ரூ.50 ஆயிரத்தை வனத்துறையினர் வழங்கினர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.