ETV Bharat / state

'பிரபாகரன் சொல்லிட்டு வருபவர் அல்ல; வந்துவிட்டு சொல்பவர்' - சீமான் அதிரடி பேச்சு - பிரபாகரன் குறித்து பேசிய சீமான்

'பிரபாகரன் 15ஆண்டுகளாக பதுங்கி இருக்க மாட்டார், அவர் சொல்லிட்டு வருபவர் அல்ல; வந்துவிட்டு சொல்பவர்' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 13, 2023, 8:46 PM IST

சீமான் செய்தியாளர்கள் சந்திப்பு

ஈரோடு: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (பிப்.13), ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, 'விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்’ என்று பரவும் தகவல் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், 'என்னிடம் பதில் இல்லை. சில கேள்விகள் தான் உள்ளன. தம்பி பாலச்சந்திரனை சாகவிட்டுட்டு தன் உயிரை காப்பாற்றிக்கொள்ளும் கோழையில்லை, பிரபாகரன். எக்காரணத்தை கொண்டும் நாட்டை விட்டு வெளியேறமாட்டேன் என்று கூறியவர்.

15 ஆண்டுகளாக பதுங்கியிருக்க மாட்டார். அவர் சொல்லிட்டு வருபவர் அல்ல; வந்துவிட்டு சொல்பவர். அதனால் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். மக்களுக்கு முன் தோன்றுவார் என்றால், வந்ததற்குப் பிறகு பேசுவோம். பழ. நெடுமாறனோடு அப்பா - பையன் உறவு உள்ளது. என்னிடம் அவர் இது குறித்து பேசவில்லை. ஊடகத்தின் வாயிலாகவே நானும் தெரிந்துகொண்டேன். இதை விவாதத்திற்கு எடுத்துகொள்ளாமல் கடந்து செல்ல வேண்டும்.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகாமிட்டு இடைத்தேர்தலில் வாக்கு கேட்டு வருவது ஜனநாயக அத்துமீறல். பசுவை தொட்டால் புனிதம், மனிதன் தொட்டால் தீட்டு என்கிற கூட்டமாக உள்ளது. அவர்களுக்கு கொள்கையும் இல்லை; கோட்பாடும் இல்லை.

தற்போது கொள்ளையில் வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பல்கள் இறங்கியுள்ளனர். அவர்களை வட மாநிலத்தவர் என்று சொல்லாமல் இந்திக்காரர்கள் என்று கூற வேண்டும். நேற்று வீட்டை உடைத்தார்கள், பிறகு வங்கி ஏடிஎம்களை உடைத்துள்ளனர்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Pazha Nedumaran: "பிரபாகரன் உயிருடன் உள்ளார்; விரைவில் காட்சி தருவார்" - பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.