ஈரோடு : ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவர் தனது மகன் சிவபாண்டி, மருமகன் பாண்டி ஆகியோருடன் இணைந்து, கடந்த 10 வருடங்களாக அந்தியூர் சுற்றுவட்டார கிராமங்களில் முறுக்கு வியாபாரத்தோடு சேர்ந்து கஞ்சாவையும் விற்பனை செய்து வந்துள்ளார்.
இது குறித்து அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் தவிட்டுபாளையம் பகுதியில் அந்தியூர் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஜெயபாண்டி, சிவபாண்டி, பாண்டி ஆகிய மூவரும் வந்த காரை நிறுத்தி விசாரணை செய்தனர்.
விசாரணையில் மூவரும் முறுக்கு விற்பனையோடு கஞ்சா பொட்டலங்களையும் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இவர்களுக்கு தொடர்ச்சியாக கஞ்சா பொட்டலங்களை சப்ளை செய்து வந்த கோவை மாவட்டம் நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற கோவிந்தராஜையும் காவல்துறையினர் தனிப்படை அமைத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய கார், இரண்டு இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க : முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த பறக்கும் படை - ராதாகிருஷ்ணன்