ETV Bharat / state

திறக்கப்பட்ட இரண்டே மணி நேரத்தில் மூடப்பட்ட டாஸ்மாக்! - புது டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம்

ஈரோடு: பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் அரியப்பம்பாளையம் பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை இரண்டே மணி நேரத்தில் மூடப்பட்டது.

Sathy Tasmac
Sathy Tasmac
author img

By

Published : Dec 10, 2019, 3:05 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக டாஸ்மாக் கடை கட்டப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை திறக்க தயாரானது. ஆனால் புதிய டாஸ்மாக் கடைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கடை திறக்கப்படவில்லை.

இந்நிலையில், டாஸ்மாக் கடை திடீரென்று திறக்கப்பட்டது. மதுபான பிரியர்களின் கூட்டம் அலைமோதியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திரண்டுவந்த பெண்கள் கடை முன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும், அங்கு வந்த காவல் துறையினர் மதுபானக்கடைக்கு பாதுகாப்பு அளித்தனர். சுமார் இரண்டு மணி நேரத்துக்கு பின் கடையை மூடுவதாக காவல் துறையினர் அறிவித்தனர். பொதுமக்கள் முன்னிலையில் கடை மூடப்பட்டதையடுத்து பெண்கள் கலைந்துசென்றனர்.

மக்கள் எதிர்பால் இரண்டு மணி நேரத்தில் மூடப்பட்ட டாஸ்மாக்

புதிய டாஸ்மாக் கடை குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 4 கி.மீ. தூரத்தில் இருந்த கடையை குடியிருப்புப் பகுதியில் தற்போது திறந்துள்ளனர். இந்த இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் விபத்துகள் நிகழும் என்பதால் கடையை மூடக்கோரினோம் என்றும் கடை மீண்டும் திறக்கப்பட்டால் பெரும் போராட்டம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: வெங்காயம் விலையேற்றம், ஆனாலும் விவசாயிகள் நஷ்டம்!

Intro:Body:tn_erd_02_sathy_tasmac_closed_vis_tn10009

சத்தியமங்கலம் அருகே புதியதாக திறக்கப்பட்ட கடை பொதுமக்கள் எதிர்ப்பால் 2 மணி நேரத்தில் மீண்டும் மூடப்பட்டது

சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக டாஸ்மாக் கடை கட்டப்பட்டு ஞாயிற்றுக்கிழமை திறக்க தயாரானது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் எதிர்ப்புத தெரிவித்தால் கடை திறக்கப்படவில்லை. மேலும் கடை திறப்பு இல்லை என போலீசார் உறுதியளித்தனர். இந்நிலையில், இன்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. மதுபானபிரியர்கள் கூட்டம் அலைமோதியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திரண்டு வந்த பெண்கள் கடை முன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் மதுபானக்கடைக்கு பாதுகாப்பு அளித்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பின் கடையை மூடுவதாக போலீசார் அறிவித்தனர். பொதுமக்கள் முன்னிலையில் கடையை மூடியதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் 4 கிமீ தூரத்தில் வைத்திருந்த கடையை குடியிருப்பு பகுதியில் வைத்துள்ளனர்.24 மணி நேரமும் போக்குவரத்து இங்கு கடை திறக்கப்பட்டால் விபத்துகள் நிகழும் என்பதால் கடையை மூடக்கோரியதாக தெரிவித்தனர். கடையை மீண்டும் திறந்தால் அது போராட்டமாக வெடிக்கும் என்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.