ETV Bharat / state

சுங்க கட்டணம் வசூல்: மார்க்கெட் வியாபாரிகள் மறியல் - நேதாஜி மார்க்கெட் வியாபாரிகள் மறியல்

ஈரோடு: நேதாஜி தினசரி காய்கறி சந்தையில் கூடுதல் சுங்க கட்டணம் வாடகை வசூலிப்பதாக புகார் தெரிவித்த வியாபாரிகள் காய்கறிகளை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Vegetables
Vegetables
author img

By

Published : Jul 5, 2021, 6:31 PM IST

ஈரோடு வ.உ.சி மைதானத்திற்கு கடந்த ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்ட நேதாஜி தினசரி சந்தையில் மாநகராட்சி நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்ட சுங்க கட்டணத்தைவிட ஒப்பந்ததாரர் கூடுதல் கட்டணம், கூடுதல் வாடகை வசூலிப்பதாக வியாபாரிகள் மாநகராட்சி ஆணையரிடம் புகார் தெரிவித்திருந்தனர். இந்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் ஆணையர் எடுக்காததால் ஈரோடு பேருந்து நிலையம் அருகே சாலையில் காய்கறிகளை கொட்டி வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, கடைக்கு தினசரி 16 ரூபாய் வாடகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஒப்பந்ததாரர் 50 ரூபாயும், காய்கறி மூட்டை ஒன்றுக்கு 7 ரூபாய்க்கு பதில் 30 ரூபாயும் வசூலிப்பதாக குற்றஞ்சாட்டினர். வாகன அனுமதி கட்டணமும் பல மடங்கு உயர்த்தி வசூலிப்பதாகவும் புகார் கூறிய அவர்கள், இதனை தட்டிக்கேட்டால் அடியாட்கள் மூலம் மிரட்டப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர், மாநகராட்சி அலுவலர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். மேலும் சம்பவ இடத்திற்கு ஈரோடு கிழக்கு சட்டபேரவைத் தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெரா வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர் தினமும் சந்தைக்கு வந்து புகார் குறித்து ஆய்வு செய்வேன் என்று உறுதி அளித்தார்.

இதையும் படிங்க: நேதாஜி மார்க்கெட் காய்கறிகள் தேக்கம் - வியாபாரிகள் நஷ்டம்!!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.