தமிழ்நாடு கர்நாடக எல்லையில் ராமபுரம் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அறிவிப்பு பெயர்ப்பலகையை கன்னட சலுவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், அவரது ஆதரவாளர்களுடன் சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இதனை ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா, நில அளவை அலுவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உறுதிப்படுத்தினர்.
பொதுசொத்துக்கு சேதம் விளைவித்ததாக வாட்டாள் நாகராஜ், அவரது ஆதரவாளர்கள் மீது தாளவாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
தற்போது இச்சம்பவத்தை கண்டித்து தாளவாடி பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் வாட்டாள் நாகராஜை கைது செய்து வேண்டும், சேதப்படுத்திய பெயர்ப்பலகையை மீண்டும் சரிசெய்ய வேண்டும், கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படும் நபர்களை கைதுசெய்ய வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: அஞ்சலகக் கணக்கர் தேர்வை தமிழ் மொழியில் நடத்த வேண்டும்: சீமான்