ETV Bharat / state

பெருந்துறை அருகே 50 பேருக்கு மர்ம காய்ச்சல் - எம்எல்ஏ நேரில் ஆய்வு! - சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் நேரில் சென்று ஆய்வு

ஈரோடு: பெருந்துறை அருகேயுள்ள சாணார்பாளையம் கிராமத்தில் பெயர் தெரியாத காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50 பேரை, மருத்துவக் குழுவினருடன் சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் நேரில் ஆய்வு செய்தார்.

eroad
author img

By

Published : Sep 30, 2019, 9:00 PM IST

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள வரப்பாளையம், சாணார்பாளையம் ஆகிய இரு கிராமங்களில் பெயர் தெரியாத காய்ச்சல் பரவிவருகிறது. இக்காய்ச்சலால் அந்த கிரமங்களைச் சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இது சாதாரண காய்ச்சலாக தொடங்கி, பின்பு கை கால் வீக்கம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனையறிந்த பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம், மருத்துவ குழுவிற்கு ஏற்பாடு செய்து அவர்களுடன் காய்ச்சல் பரவிவரும் பகுதிகளுக்கு நேரில் சென்றார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துப் பேசி அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்க ஏற்பாடுகளை செய்தார். பின்னர், மருத்துவ குழுவினர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்தனர். பாதிக்கப்பட்ட அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம்

இதுகுறித்து, சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம், ‘காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். விரைவில் இக்காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை என்ன? - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Intro:ஈரோடு ஆனந்த்
செப்.30

பெருந்துறை அருகே 50 பேருக்கு மர்ம காய்ச்சல் - எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு!

பெருந்துறை அருகே சாணார்பாளையம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்டோருக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் மர்ம காய்ச்சல் பாதிக்கபட்ட கிராமத்தில் வீடுவீடாக மருத்துவ குழுவினருடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Body:தமிழகம் முழுவதும் தற்போது தொடர் மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்களுக்கும் பல்வேறு வகையான காய்ச்சல் பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள வரப்பாளையம் மற்றும் சாணார் பாளையம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்டோருக்கு மர்மகாய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் 4-மருத்துவர்கள் 20-மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் நடமாடும் மருத்துவமனை வாகனம் ஆகிய குழுவுடன் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு வீடுவீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சாதாரண காய்ச்சலாக தொடங்கி பின்பு கை கால் வீக்கம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மருத்துவ குழுவினர் கிராமத்தில் உள்ளவர்களின் ரத்தங்களை அதே இடத்தில் பரிசோதனை செய்து காய்ச்சல் உள்ளவர்களை 108-ஆம்புலன்ஸ் வாகனம் முழம் பெருந்துறை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கிராமத்தில் 50-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட தகவல் அறிந்து சம்பவ இடத்தக்கு வந்த பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம் கிராமத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களை மருத்துவ குழுவுடன் வீடுவீடாக சென்று நேரில் பார்வையிட்டார்.

Conclusion:மேலும் கிராமத்தில் தண்ணீர் தொட்டிகள் மற்றும் சாக்கடைகள் உடனடியாக சுத்தம் செய்யபட்டு மழைநீர் தேங்கி கொசு உற்பத்தி ஆகாமல் மருத்துகள் அடிக்கபட்டு வருவதாகவும் சட்டமன்ற உறுப்பினர் தெரிவத்தார்.

பேட்டி : தோப்பு வெங்கடாசலம் - பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.