ETV Bharat / state

திருமணமான 7 மாதத்தில் கணவரை கொன்ற மனைவி - erode news in tamil

ஈரோடு: அந்தியூர் காலனியில், அடிக்கடி தாம்பத்திய உறவுக்கு வற்புறுத்திய கணவரை, சாப்பாட்டில் விஷம் வைத்து மனைவி கொலை செய்துள்ளார்.

கணவனை கொலை செய்த மனைவி
கணவனை கொலை செய்த மனைவி
author img

By

Published : Feb 21, 2021, 11:35 AM IST

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனியைச் சேர்ந்த நந்தகுமாருக்கு (33) சொந்தமாக 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்தியூர் ஜீவா செட் பகுதியில் உள்ள மாவு மில்லில் வேலை பார்த்த அவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மைதிலி என்பவருடன் திருமணமானது. அவர்கள் இருவரும் தோட்டத்து வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி பயிர்களுக்கு உயிர் கொல்லி மருந்து தெளித்துவிட்டு பின்னர் வீட்டில் காலை நேர சிற்றுண்டி உட்கொண்டார். சாப்பாட்டில் உப்பு அதிகமாக இருப்பதால் சாப்பிட முடியாமல் பாதியிலேயே சென்றுவிட்டார். பின்னர் மாவு மில்லில் வேலைக்கு சென்ற அவர் அங்கு மதிய உணவை சாப்பிடும்போது மீண்டும் குமட்டல் எடுத்ததால் அதனை சாப்பிடாமல் கொட்டிவிட்டார்.

உடலில் மாற்றங்கள் தெரியவே கடந்த 31ஆம் தேதி அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர் உடலில் விஷம் இருப்பதாக கூறி மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் நந்தகுமார் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது தனது மனைவி தனக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொடுத்திருக்கலாம் என வாக்குமூலம் கூறியதாக தெரிகிறது.

காவல் துறையினர் நந்தகுமாரின் உடலை உடற்கூராய்வுக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, பின்னர் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர்.

அவ்விசாரணையில் அவர் தற்போது 5 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும், இந்நிலையில் அவரது கணவர் நந்தகுமார் அவரிடம் இரவு பகல் பாராமல் அடிக்கடி தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளும்படி தொந்தரவு செய்துகொண்டே இருந்ததால், ஆத்திரமடைந்து உணவில் விஷம் வைத்து கொடுத்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து மைதிலி மீது கொலை வழக்கு பதிவு செய்த அந்தியூர் காவல் துறையினர் மைதிலியை பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க:ஒன்றரை வயது குழந்தையைக் கொன்ற தந்தைக்கு தூக்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.