ETV Bharat / state

‘விவசாய கடன் ரத்து செய்து வரலாறு படைத்த தமிழ்நாடு அரசு ’-அமைச்சர் செங்கோட்டையன்! - அமைச்சர் செங்கோட்டையன் கருத்து

ஈரோடு: சட்டப்பேரவை தேர்தல் வரும் முன்பே விவசாய கடன் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன்

author img

By

Published : Feb 20, 2021, 5:22 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைம் தனியார் திருமண மண்டபத்தில் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு ஆயிரத்து 500 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

அப்போது, அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “ இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றில் ஒரு அரசு என்ன செய்யவேண்டுமோ அத்தனை மக்கள் நலத்திட்டங்களையும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து அதிமுகவிற்கு ஆதரவு அளித்து வரும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறினார்.

பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன்

கூரை வீடுகளை மாற்ற ஏதுவாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர் , தேர்தல் வரும் முன்பே விவசாய கடன் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

விழாவில் கோட்டாட்சியர் ஜெயராமன், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கபடி வீரர்களை சிறப்பிக்கும் சிலை! - அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.