ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி ஊராட்சியில் 303 பயனாளிகளுக்கு, சலங்கபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விலையில்லா அசில் நாட்டுக்கோழிக் குஞ்சுகளை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்.
அப்போது, கோழிக்குஞ்சுகளின் தரம் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் கருப்பணன், அதன் தரம் குறிப்பிடப்படும் படி இல்லாததால் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களை கண்டித்தார்.
தரமில்லாத கோழிக்குஞ்சுகளை பயனாளிகளுக்கு வழங்கினால் அவர்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் போதே பாதிக்குஞ்சுகள் இறந்துவிடும் என்றும், இதுபோன்ற தரமற்ற குஞ்சுகளை வழங்கினால் பயனாளிகள் எவ்வாறு பயன்பெறமுடியும் என்றும் இனிமேல் வழங்கும் கோழிக்குஞ்சுகள் தரமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கவேண்டும் என கட்டளையிட்டார். அதைத் தொடர்ந்து தரமற்ற கோழிக்குஞ்சுள் அப்புறப்படுத்தப்பட்டு தரமான கோழிக்குஞ்சுள் மட்டும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
இவ்விழாவில் கால்நடை பராமரித்துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்க அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.