ETV Bharat / state

பிளஸ் 1 பொதுத்தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்! - Minister Senkottaiyan Press Meet

ஈரோடு: பிளஸ் 1 பொதுத்தேர்வில் மீதமுள்ள ஒரு பாடத்திற்கு தேர்வு தேதி முதலமைச்சருடன் கலந்துபேசி வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு  Minister Senkottaiyan Press Meet  Minister of School Education K.A.Sengottaiyan
Minister Senkottaiyan Press Meet
author img

By

Published : May 6, 2020, 1:07 PM IST

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு சத்து மாத்திரைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "பள்ளிக் கல்வித் துறையை பொருத்தவரையிலும் 80 விழுக்காடு பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதற்காக அச்சகங்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு முதலமைச்சரின் ஒத்துழைப்போடு அப்பணிகள் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருள்களான புத்தகப்பை, சாக்ஸ் உள்ளிட்ட பொருள்கள் பள்ளி திறந்த ஒரு வார காலத்திற்குள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இன்னும் ஒரு தேர்வு பாக்கியுள்ள நிலையில் கரோனாவுக்கு தீர்வு கண்டவுடன் அந்தத் தேர்வு எந்த தேதியில் நடைபெறும் என்பதை முதலமைச்சருடன் கலந்துபேசி பின்னர் அறிவிக்கப்படும். நீட் தேர்வுக்கு இன்று 11 மணியளவில் நியூ பாக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் அனைவருக்கும் இலவசமாக ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நூலகங்களில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இடைவெளியில்லாமல் நடைபெறாது பொதுத்தேர்வு அட்டவணையை பொறுத்தவரை இடைவெளி இருக்கும்.

நமக்கு தேவை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டுமே அதற்காக ஆன்லைன், தொலைக்காட்சிகள் மூலம் பாடங்களை கற்றுத்தரும் நடவடிக்கைள் நடைபெற்றுவருகிறது. கரோனா நோய் தொற்று தடுப்பிற்கு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளம் அந்தந்த மாதம் வழங்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை ஜூன் மாதத்தில் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.