ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கவுந்தப்பாடியில் அரசு தொடக்கப் பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டடத்திற்கு பூமி பூஜை, விவசாயிகளுக்கு கலப்பையுடன் கூடிய வாடகை டிராக்டர் வழங்கும் நிகழ்வுகளில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில்தான் கரோனா பரிசோதனை அதிகளவில் நடத்தப்படுவதால் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
அதிகமாக கரோனா பரிசோதனை செய்த மாநிலங்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் ரூ.5 கோடி செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழ்நாடு அரசு சாதக பாதகங்களை நன்கு ஆராய்ந்து தமிழ்நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில், சாதகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு பாதகங்கள் மத்திய அரசிடம் தெரிவிக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: மக்களின் குறைகளைக் கேட்டு உடனடி நடவடிக்கைக்கு அமைச்சர் உத்தரவு!