ஈரோடு மாவட்டம் பவானி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஆப்பக்கூடல் பகுதியில் இன்று (மார்ச் 27) அமைச்சர் கேசி கருப்பண்ணன் வாக்கு சேகரித்தார்.
அப்பொழுது அவர் பேசியதாவது, "கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை அறிவித்து பொதுமக்களை ஏமாற்றினார்கள்.
தற்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் செயல்படுகிறது. அதிமுக ஆட்சிக்கு மீண்டும் வந்தால் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவோம்" என்றார்.
இதையும் படிங்க: திமுகவினர் பரப்புரையின் போது கண்ணியமாக பேச வேண்டும் - ஸ்டாலின்