ETV Bharat / state

'இல்லம் தேடி கல்வி' திட்டம் நிறுத்தமா? - அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது என்ன? - said illam thedi kalvi scheme

'மாநில கல்விக்கொள்கை' குறித்த ஆய்வு அறிக்கை குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் எனவும் 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தை நிறுத்தும் எண்ணம் இல்லை எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 16, 2022, 6:32 PM IST

'இல்லம் தேடி கல்வி' திட்டம் தொடரும் - அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி

ஈரோடு: 'புதிய பாரத எழுத்தறிவு' திட்டத்தில், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாமினை இன்று (டிச.16) தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்கத் தெரியாத 4.8 லட்சம் நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்க ரூ.9.83 கோடி மதிப்பீட்டில், புதிய எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் அனைவரும் கல்வி பெற்ற மாநிலமாக தமிழ்நாடு உருவாகும்.

மாணவர்களுக்கு விளையாட்டும் அவசியம்: பள்ளிகளில் விளையாட்டு நேரத்தில் மற்ற பாடங்கள் நடத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். மாணவர்கள் தங்களை புத்துணர்வு செய்து கொள்வதற்கான ஒரு நேரமாகவும் இது இருக்கும். எனவே, விளையாட்டு வகுப்புகளில் விளையாட்டுகளை மட்டுமே மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.

மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார்: 'மாநில கல்வி கொள்கை' தொடர்பான குழு, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணத்தை முடித்துள்ளனர். தற்போது, துறை சார்ந்த கருத்துக்களை கேட்டு வருகின்றனர். இந்த டிசம்பர் மாத இறுதிக்குள் கருத்துக்கேட்பு முடித்து, வரும் ஜனவரி மாதத்தில் அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்குவார்கள்; அந்த அறிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவு எடுப்பார்.

போதை பொருள்கள் இல்லா தமிழ்நாடு: பள்ளிகளில் போதைப் பொருள்கள் பயன்பாடு தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளாக கவனிக்காமல் விட்டுவிட்டனர். தற்போது, மாணவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

டிஆர்பி (Tamil Nadu Teachers Recruitment Board -TRB) மூலம் 9ஆயிரத்து 300 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கு பணி வழங்கக் கோரிக்கை வைத்துள்ளனர். அது முதலமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளோம். இது குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ ‘காலை சிற்றுண்டி திட்டம்' முதல் கட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் கட்டம் விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைப்பார். ஆயிரத்து 545 பள்ளிகளில், ஒரு லட்சத்து 15 ஆயிரம் மாணவர்களுக்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. அதற்கான இரண்டாம் கட்ட திட்டம் தயாராகி கொண்டிருக்கின்றது. முதலமைச்சர் இதனை அறிவிப்பார்.

நிறுத்தும் எண்ணம் இல்லை: கரோனோ காலத்தில் தொடங்கப்பட்ட 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தை நிறுத்துவதற்கான எண்ணம் இல்லை. வசதியற்ற மாணவர்களுக்கு இது மிகப்பெரும் வரப்பிரசாதமான திட்டமாக இருக்கிறது. இன்றைக்கும் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர். மாலை நேரத்தில் ஒன்றரை மணி நேரம் மாணவர்களை புத்துணர்வு செய்வதற்கான ஒரு திட்டம். அவர்களுக்கு தொடர்ந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார்.

இதையும் படிங்க: பட்டியல் இனத்தவரை துணை முதலமைச்சராக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.