ETV Bharat / state

இதயம் காப்போம் விழிப்புணர்வு மாரத்தான் - ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! - ஈரோடு

ஈரோடு : இதயம் பாதுகாப்போம், இதயத்தை வலுப்படுத்துவோம் என்பதை வலியுறுத்தி ஈரோட்டில் தனியார் மருத்துவமனை, ரோட்டரி அமைப்புகள் சார்பில்  மாரத்தான் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

marathon_awareness erode
author img

By

Published : Sep 29, 2019, 11:43 AM IST

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி நாடு முழுவதும் இதய பாதுகாப்பு விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் உடலின் இன்றியமையாத பாகமான இதயத்தைப் பாதுகாப்பது குறித்தும், இதயத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் தனியார் மருத்துவமனை, ரோட்டரி அமைப்புகள் சார்பில் இதய பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான், வாக்கத்தான் நகரின் முக்கிய வீதிகளில் இன்று நடைபெற்றது. ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த தனியார் அமைப்பினர், தன்னார்வ ஆர்வலர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இதயம் காப்போம் விழிப்புணர்வு மாரத்தான்

ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதான வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்ததுடன் அவரும் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியின் போது 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கி வரும் இதயத்திற்கு முறையான பாதுகாப்பை வழங்கிட வேண்டும் என்றும், முறையான பரிசோதனை மேற்கொண்டு இதயப் பாதுகாப்பை வலுப்படுத்திட வேண்டும் என்றும், உடற்பயிற்சியை மேற்கொண்டு ஏனைய உடல் உபாதைகளை குறைத்து இதயத்திற்கு ஊக்கம் கொடுத்திட வேண்டும் என்பன உட்பட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. மேலும்,இதில் முதலாவதாக வந்தவர்கள் உள்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் செய்தியாளர் சந்திப்பு

இதையும் படிங்க:

இருதய தினத்தை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் நடத்திய மாரத்தான் போட்டி!

Intro:ஈரோடு ஆனந்த்
செப்.29

இதயம் காப்போம் விழிப்புணர்வு மாரத்தான்! - மாவட்ட எஸ்.பி. பங்கேற்பு!

இதயம் பாதுகாப்போம்,இதயத்தை வலுப்படுத்துவோம் என்பதை வலியுறுத்தி ஈரோட்டில் தனியார் மருத்துவமனை மற்றும் ரோட்டரி அமைப்புகள் சார்பில் நடைபெற்ற இருதய பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் வாக்கத்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Body:ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 29ம் தேதி நாடு முழுவதும் இருதய பாதுகாப்பு விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் உடலின் இன்றியமையாத பாகமான இதயத்தைப் பாதுகாப்பது குறித்தம் இதயத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் தனியார் மருத்துவமனை மற்றும் ரோட்டரி அமைப்புகள் சார்பில் இருதய பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் வாக்கத்தான் இன்று நடைபெற்றது. ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த தனியார் அமைப்பினர் மற்றும் தன்னார்வ ஆர்வலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதான வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்துடன் அவரும் பங்கேற்றார்.

நிகழ்ச்சியின் போது 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கி வரும் இதயத்திற்கு முறையான பாதுகாப்பை வழங்கிட வேண்டும் என்றும், முறையான பரிசோதனை மேற்கொண்டு இதயப் பாதுகாப்பை வலுப்படுத்திட வேண்டும் என்றும், உடற்பயிற்சியை மேற்கொண்டு ஏனைய உடல் உபாதகளை குறைத்து இதயத்திற்கு ஊக்கம் கொடுத்திட வேண்டும் என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

Conclusion:ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதான வளாகத்தில் தொடங்கிய மாரத்தான் மற்றும் வாக்கத்தான் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பூங்கா வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் முதலாவதாக வந்தவர்கள் உள்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பேட்டி : சக்திகணேசன் –மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.