ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த குமாரபாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மழை வேண்டி மகா யாகம் நடைபெற்றது. இதனையொட்டி பவானி ஆற்றங்கரையில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டு விநாயகர் கோயில் முன் கோமாதா பூஜை நடைபெற்றது.
பின்னர், கோமாதாவை ஊர்வலமாக அழைத்து வந்து யாக பூஜைக்கு கொண்டு வந்தனர். பசுவுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் 16 வரலட்சுமி பெண் சாமி சிலைகள், பார்வதி சிவன் சிலைகள் முன் மகா யாக குண்டம் வார்க்கப்பட்டு வேத விற்பன்னர்கள் யாகம் நடத்தினர். யாகத்தில் மழை வேண்டி பக்தர்களும், பொதுமக்களும் பிரார்த்தனை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, யாகத்தில் பூஜிக்கப்பட்ட கலசம் எடுத்துவரப்பட்டு அங்காள பரமேஸ்வரி சுவாமிக்கு வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில், 20 வகையான உணவுகள் படையலிட்டு அந்த உணவுகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மீன் வளம் பெருக வேண்டி சமுத்திர ராஜனுக்கு வசந்த பூஜை!