ETV Bharat / state

'கருமுட்டை தானம் குறித்து அனைத்து மருத்துவமனைக்கும் வரன்முறை அறிக்கை அனுப்பப்பட உள்ளது' - மா சுப்ரமணியன் பேட்டி

தமிழ்நாடு முழுவதும் உள்ள செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு கருமுட்டை தானம் சம்பந்தமாக சட்ட திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த விரிவான வரன்முறை அறிக்கை தயார் செய்து அனுப்பப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

’கருமுட்டை தானம் குறித்து அனைத்து மருத்துவமனைக்கு சுட்டெரிக்கை தயார்’ -

author img

By

Published : Jul 19, 2022, 9:46 PM IST

ஈரோடு தாளவாடி வட்டாரத்தில் இன்று(ஜூலை 19) ஹீமோகுளோபினோபதி திட்ட விரிவாக்க விழாவினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இத்திட்டம் தமிழ்நாட்டில் தாளவாடி உட்படப் பல்வேறு மலைக்கிராமங்களில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

ஹீமோகுளோபினாபதி நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோரிடமிருந்து, இந்நோய் குழந்தைகளுக்கு மரபு வழியாக ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரத்தசோகை மற்றும் உடலின் முக்கிய உறுப்புகள் பாதிப்படைந்து மரணம் ஏற்படுகிறது.

ஹீமோகுளோபினாபதி பரிசோதனை வளர் இளம் பருவத்தினருக்கு 2019 ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த பரிசோதனை திட்டம் விரிவாக்கப்பட்டு இன்று தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ஓசூர் கிராமத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கர்ப்பிணிகள் உள்ள வீடுகளுக்கு நேரடியாகச் சென்று 'ஹீமோகுளோபினாபதி நோய் கண்டறியும்' திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து உடனடி வயிற்றுப்போக்கால் குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழப்பைத் தடுக்க 'உப்புக் கரைசல் பவுடர்' வழங்கப்பட்டது. பின்னர் தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழு நோயாளிகளைக் கண்டறியும் முகாம் மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கருமுட்டை தானம் என்பது சட்டப்பூர்வமான ஒன்று. 21 வயது முதல் 35 வரை வயது வரை உள்ள பெண்கள் கருமுட்டை தானம் கொடுக்கலாம். ஈரோட்டில் 16 வயது சிறுமி கருமுட்டை தானம் கொடுக்கப்பட்டது கண்டறியப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள 4 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா மற்றும் கேரளாவில் உள்ள மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள செயற்கை கருத்தரித்தல் மருத்துவமனைகளுக்கு கருமுட்டை தானம் சம்பந்தமாக விரிவான வரன்முறை அறிக்கை தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட உள்ளது.

சுகாதாரத்துறையில் 4308 புதிய பணியிடங்கள் விரைவில் நிரப்ப ஏற்பாடு: மருத்துவத்துறையின் வழிகாட்டுதலின்படி செயல்படாத செயற்கை கருத்தரித்தல் மையங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் அந்த அறிக்கையில் தகவல்கள் இடம்பெறும். தமிழ்நாட்டில் போலி மருந்துகள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சுகாதாரத்துறையில் 4308 புதிய பணியிடங்கள் மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிஎஸ்சி ரேடியாலஜி உள்ளிட்டப் பல்வேறு பிரிவுகளில் படித்தவர்களுக்கு இதில் பணியிடங்கள் ஏற்படுத்தப்படுவது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வளர்த்த கடா மார்பில் பாய்கிறது - தனுஷ், செல்வராகவன் இடையே சண்டை?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.