சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரிஅம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை வழியாகத் தமிழ்நாடு கர்நாடக என இருமாநில போக்குவரத்து நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் ஜல்லி பாரம் ஏற்றிய லாரியொன்று தாளவாடி செல்வதற்காகத் திம்பம் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது. ஆறாவது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது பழுது ஏற்பட்டு சாலையின் நடுவே நகரமுடியாமல் நின்றது. இதன்காரணமாக மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் செல்லமுடியாமல் அணிவகுத்து நின்றன.
சத்தியமங்கலத்திலிருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு லாரியில் ஏற்பட்ட பழுதுநீக்கப்பட்டு 3 மணி நேரத்துக்குப் பின்பு லாரி நகர்த்திநிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது. இதன்காரணமாக இருமாநிலங்களுக்கிடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கோடைக்காலத்தில் ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இருக்காது - அமைச்சர் தங்கமணி உறுதி!