ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸின் சார்பில் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, மறைந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான வசந்தகுமார் ஆகியோரின் திருவுருவப் படங்கள், கட்சி அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் டாக்டர் ஜி.ராஜன் தலைமையில் திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலருமான முத்துசாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான அந்தியூர் செல்வராஜ், காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சார்ந்த அனைத்துக் கட்சி மாவட்டத் தலைவர்கள், பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டு இத்திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.